புதிய Body Worn Camera : போக்குவரத்து காவலர்கள் மகிழ்ச்சி!

New body Worn cameras project in Tamil Nadu Traffic : போக்குவரத்து காவல்துறையினருக்கு புதிய அப்டேட்டுடன் பாடி வோன் கேமரா வழங்கப்படவுள்ளது என தமிழக போக்குவரத்து துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
New body Worn cameras project aims to build traffic police community trust in Tamil Nadu
New body Worn cameras project aims to build traffic police community trust in Tamil NaduGoogle
2 min read

அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறை

New body Worn cameras project in Tamil Nadu Traffic Police : போக்​கு​வரத்து போலீ​ஸாரின் நடவடிக்​கை, வாகன ஓட்​டிகளின் செயல்​பாடு​களை துல்​லிய​மாக அறிந்து கொள்ள வசதி​யாக, வாகன சோதனை​யில் ஈடு​படும் போக்​கு​வரத்து போலீ​ஸாருக்கு நவீன ‘பாடி வோன் கேம​ரா’ (Body worn camera) விரை​வில் வழங்​கப்பட உள்​ளது. இதற்​கான சோதனை ஓட்​டம் தொடங்கி உள்​ளது.

விதிமீறல்களுக்கு அபராதம்

போதை​யில் வாக​னம் ஓட்​டு​வோர், அதிவேக​மாக வாக​னங்​களை இயக்​கு​வோர், வாகன பந்​த​யத்​தில் ஈடு​படு​பவர்​கள், ஒரு வழிப்​பாதை​யில் எதிர் திசை​யில் தடையை மீறி செல்​வோர், ஒரே இருசக்கர வாக​னத்​தில் 2 பேருக்கு மேல் செல்​வோர், ஹெல்​மெட் அணி​யாமல் இருசக்கர வாக​னம் ஓட்​டு​வோர், சீட் பெல்ட் அணி​யாமல் காரை ஓட்​டிச் செல்​வது உட்பட பல்​வேறு வகை​யான போக்​கு​வரத்து விதி​களை மீறு​வோருக்கு போக்​கு​வரத்து போலீ​ஸார் அபராதம் விதிக்​கின்​றனர்.

போக்குவரத்து காவல்துறையினருக்கு பாடி வோன் கேமரா

இந்த அபராதங்​களை நேரடி​யாக களத்​தில் நின்​றும், ஆங்​காங்கே உள்ள கேம​ராக்​களில் பதி​வாகும் காட்​சிகளை கட்​டுப்​பாட்டு அறை​யில் இருந்​த​வாறு கண்​காணித்​தும் போக்​கு​வரத்து போலீ​ஸார் அபராதம் விதிக்​கின்​றனர்.

தற்​போது, ‘ஏஐ’ தொழில் நுட்​பத்​துட​னும் அதிக திறன் கொண்ட கேமராக்கள் நிறு​வப்​பட்​டுள்​ளன. இதன்​மூல​மும் விதி​மீறல் வாகன ஓட்​டிகள் கண்​காணிக்​கப்​படு​கின்​றனர்.

நவீன கேமரா வசதி

இந்த கண்​காணிப்பு கேமராக்கள் இல்​லாத சாலைகளில் விதி​களை மீறு​வோருக்கு அபராதம் வசூலிக்​கும்​போது சம்​பந்​தப்​பட்ட போக்​கு​வரத்து போலீ​ஸாருக்​கும் வாகன ஓட்​டிகளுக்​கும் பல நேரங்​களில் தகராறு ஏற்​படு​கிறது.

இதற்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் வகை​யில் போக்​கு​வரத்து காவல்துறைக்கு ‘பாடி வோன் கேமரா’வழங்​கப்​பட்​டது.

காவல்துறைக்கு பாடி வோன் கேமரா

இந்த கேமராக்களை போக்​கு​வரத்தை ஒழுங்​குபடுத்​தும் போலீ​ஸார் தங்​களது சீருடை​யில் நெஞ்சு பகு​தி​யில் உள்ள சட்டை பட்​டனில் மாட்டி வைத்​துக் கொள்​வார்​கள். இதன் மூலம் போக்​கு​வரத்து போலீ​ஸார் மற்​றும் வாகன ஓட்​டிகளின் உரை​யாடல்​கள் அந்த பாடி ஒன் கேமராவில் தெளி​வாக பதி​வாகி விடும். யார் மீது தவறு உள்​ளது என்​றும் தெரிந்து விடும்.

ஆனால், இந்த கேமரா பயன்​பாட்​டில் இருக்​கும் போது அதி​க​மாக சூடா​வ​தாக​வும், போது​மான நேரம் சார்ஜ் நிற்​பது இல்லை என்ற குற்​றச்​சாட்டும் எழுந்​தது. இதை போக்​கும் வகை​யில் மேம்​படுத்​தப்​பட்ட ‘பாடி வோன் கேமரா’ சென்னை போக்​கு​வரத்து காவலில் விரை​வில் அமல்​படுத்​தப்பட உள்​ளது.

தற்​போது தின​மும் 5 போக்​கு​வரத்து உதவி ஆய்​வாளர்​களுக்கு தலா ஒன்று வீதம் வழங்​கப்​பட்டு சோதனை ஓட்​டம் தொடங்கி உள்​ளது.

வாகன சோதனையில் ஈடுபடும் போது வழங்கப்படும்

இதில் பதி​வாகும் நிகழ்​வு​களை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் உள்ள கட்​டுப்​பாட்டு அறை​யில் இருந்​த​வாறு அதி​காரி​கள் நேரடி​யாக கண்​காணிக்க முடி​யும். மேலும்,2 நாட்​கள் முழு​மை​யாக சார்ஜ் நிற்​கும்.

இது தங்​களுக்கு மிக​வும் பயனுள்​ள​தாக இருப்​ப​தாக போக்​கு​வரத்து காவல்துறையினர் மகிழ்ச்சி தெரி​வித்​துள்​ளனர். இந்த மேம்​படுத்​தப்​பட்ட கேமராக்கள் வாகன சோதனை​யில் ஈடு​படும் அனைத்து போக்​கு​வரத்து காவல்துறையினருக்கும் விரை​வில்​ வழங்​கப்​பட உள்​ள​தாக காவல்துறை அதி​காரி​கள்​ தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in