இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தீவிரம் : நாளை அதிமுக மற்றும் இடதுசாரிகள் வேட்புமனு தாக்கல் ...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்...
Nomination Filing Gains Momentum in By-Election Race: Major Political Parties Intensify Campaign Efforts!
Nomination Filing Gains Momentum in By-Election Race: Major Political Parties Intensify Campaign Efforts!AI Generated
1 min read

அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு :

மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கிய நிலையில், தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் :

இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் மதுராந்தகத்தில் ஐ. பரந்தாமனும், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரின் ஆதரவுடன் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த தேர்தலை முக்கியமான அரசியல் சவாலாக திமுக கருதுகிறது.

தவெக சார்பில் களமிறங்கிய மரகதம் குமரவேல் - சத்யபாமா

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் போட்டியிடுகின்றனர்.

இருவரும் முன்னதாக அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததன் காரணமாகவே இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை :

இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் நிலையில், அதற்கு பாஜக ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகள் விரைவில் நடைபெற உள்ளன.

இந்த கூட்டணி தேர்தல் களத்தில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுகிறது.

தனித்து களமிறங்கும் இடதுசாரிகள் :

தமிழக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.

தாராபுரத்தில் சிபிஐ மற்றும் மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐந்து முனை போட்டியாக மாறும் தேர்தல் :

தவெக, திமுக, அதிமுக-பாஜக கூட்டணி, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என பல்வேறு அரசியல் சக்திகள் களமிறங்குவதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் ஐந்து முனை போட்டியாக மாறியுள்ளது.

இந்த தேர்தல் முடிவு மாநில அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்திற்கு தயாராகி வருகின்றன.

இறுதிக்கட்டத்தை எட்டும் வேட்புமனு தாக்கல் :

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் நெருங்கி வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவாளர்களுடன் தேர்தல் அதிகாரிகளிடம் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றன.

இதன் மூலம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் களம் முழு வீச்சில் சூடுபிடித்துள்ளது.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in