

வடகிழக்கு பருவமழை தொடக்கம்
Northeast Monsoon Session in Tamil Nadu : கனமழையுடன் தொடரும் வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) என்பது ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்திலும் தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் பெய்யும் மழைக் காலம். இதனை தமிழில் “இலையுதிர் கால மழை” என்றும் அழைப்பர். இது அதிகாலை நேரத்தில் அபரிமிதமான மழைப் பொழிவை வழங்கும். வருடந்தோறும் தொடர்வது போல் இந்த ஆண்டும் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது.
தோற்றம் மற்றும் திசை
மழை மேகங்கள் வடகிழக்கிலிருந்து தென்மேற்கே நகர்கின்றன இதைதொடர்ந்து, காற்றின் திசை: வடகிழக்கில் இருந்து தென்மேற்கே நகர்ந்து செல்கிறது. இதனால் இந்தியாவின் கிழக்கு கடற்கரை (Coromandel Coast) — குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கரைக்கால், ஆந்திராவின் தெற்கு பகுதிகள் அதிக மழையை பெறுகின்றன.
மழை உருவாகும் காரணம்
ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை(Southwest Monsoon) பெய்து முடிந்தபின், வெப்பமண்டல மாற்றம் ஏற்படும். இதனால், இந்திய நிலப்பரப்பு குளிரத் தொடங்கும், ஆனால் பெருங்கடல் இன்னும் சூடாக இருக்கும். காற்று திசை மாறி, வடகிழக்கிலிருந்து ஈரமான காற்று கடலை கடந்து நிலப்பரப்பை நோக்கி வரும்போது இந்த நிகழ்வு ஏற்படும் என்ற கூறப்படுகிறது.
மழை பெய்யும் பகுதிகள் :
இதில் மழை பெய்யும்(TN Rain Update) பகுதிகளான முக்கிய மாநிலங்களை கணக்கிடும் பொழுது மழை பெறும் மாநிலத்தில் முதலாவதாக தமிழ்நாடு தொடர்ந்து, இதர மாநிலங்கள் வரிசையில் புதுச்சேரி, தென் ஆந்திரா, கிழக்கு இலங்கை பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆண்டுதோறும் தமிழ்நாடு வருடாந்திர மழையானது சுமார் 60%–70% பங்கை வடகிழக்கு பருவமழை மூலம் பெறுகிறது என்று தெரிகிறது.
மழை பெய்யும் முக்கிய மாதங்கள்
மழை பெய்யும் மாதம் மற்றும் மழையின் தன்மை மாற்றம் அடையும், இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் மழை பெய்ய தொடங்கி இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் மாதத்தில் மிகுந்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சூறாவளிக்கு வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், டிசம்பர் மாதம் மிதமான மழையில் முடிவடைந்து பின்னர் குளிர் காலம் ஆரம்பமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சூறாவளி மற்றும் புயல்கள்!
இந்தக் காலத்தில் வங்காள விரிகுடா (Bay of Bengal) பகுதியில் பல புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சில புயல்கள் கடற்கரை மாவட்டங்களை தாக்கும் — சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற பகுதிகள் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்ந்துள்ளதால் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், மிதமான முதல் கனமான மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க புயல்கள்
2015- சென்னை வெள்ளம்
2018 -கஜா புயல்
2023- மிகுனு , மந்தௌஸ் ஆகியவை
பொருளாதார தாக்கம்
சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை போன்ற மாவட்டங்களில் இரண்டாம் பருவ பயிர்கள் (சாமை, நெல், உளுந்து) இந்த மழை மீது சார்ந்துள்ளன இதனால், தொடரும் கனமழையால் நீர்த்தேக்கங்கள் நிரம்புகின்றன, மின்சாரம் உற்பத்தி மற்றும் நீர் மேலாண்மை சீராக நடக்கும்.சில நேரங்களில் அதிக மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு உண்டாகி, நெற்பயிர்கள் சேதமைடயவும் வாய்ப்புள்ளது. இதனால், வானிலை நிலைமை அறிந்து நெற்பயிர்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க : TN Weather Update : தொடங்கியது வடகிழக்கு பருவமழை! மக்களே உஷார்!
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள்!
இந்த வடகிழக்கு பருவமழை நல்லதொரு நீராதாரத்தை வழங்கினால் தொடர்ந்து நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள் புதுப்பிக்கப்பட்டு பசுமை பெருகும், பறவைகள் இடம்பெயர்தல் தொடங்கும். ஆனால் கடுமையான மழையால் மண் அரிப்பு, நிலச்சரிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும், மேலும் மக்கள் அவதி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நெற்பயிர்கள் சேதமடையும் நிலையும் சில மலைபகுதி மற்றும் விவசாய நிலங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. எனவே, எச்சரிக்கையுடன் இந்த மழைக்காலத்தை கடந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புள்ளிவிவரக் குறிப்புகள் (தமிழ்நாடு)
மாவட்டம் - சராசரி மழை அளவு (மிமீ)
சென்னை - 800–900
நாகப்பட்டினம் - 1100–1200
மதுரை - 400–500
கோயம்புத்தூர் - 200–300
என்ற அளவில் மழைப்போழிவு இருக்கும்.