
NTK Seeman New Passport Case : சீமான் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்ததாகவும், அதனை தேட தீவிர முயற்சி செய்தும், கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் புதிய பாஸ்போர்ட்டை வழங்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்த போது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, தனது விண்ணப்பம்(Passport Application) நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
சீமான் புதிய பாஸ்போர்ட் வழக்கு :
இந்த வழக்குகள் ஒவ்வொன்றும் அரசியல் காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்டவை என்பதால் புது பாஸ்போர்ட் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(NTK Seeman).
மேலும் படிக்க : பொருளாதாரம் தெரியாத ஆட்சியாளர்கள் : மூடர்களா என சீமான் ஆவேசம்
சீமான் வழக்கு ஒத்திவைப்பு :
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதுதொடர்பாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரியும், நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளரும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.