முதல்வர் விஜய்யுடன் பிரதமர் மோடி பயணம் : மெட்ரோ சேவை உட்பட ரூ.700 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
PM Modi Chennai Visit Metro 2nd Phase Startup Illaiyaraja Centre
PM Modi Chennai Visit Metro 2nd Phase Startup Illaiyaraja Centresource: ai generated
1 min read

PM Modi Chennai Visit Metro 2nd Phase Startup Illaiyaraja Centre

பிரதமரின் வருகை மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள்

பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 11) சென்னைக்கு வருகை தருகிறார். தனது இந்த அதிகாரப்பூர்வ பயணத்தின் போது பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

தமிழக முதல்வர் விஜய்யுடன் பிரதமர் மோடி பயணம்

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக பூந்தமல்லி - வடபழனி இடையிலான 14.64 கி.மீ தொலைவிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய்யுடன் பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் இணைந்து பயணம் செய்யவுள்ளார்.

முக்கியத் திட்டங்கள் மற்றும் திறப்பு விழாக்கள்

ஸ்டார்ட்-அப் நிறுவனர்களுடன் சந்திப்பு: சென்னை ஐஐடி-யில் இயங்கி வரும் 10-க்கும் மேற்பட்ட முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் நிறுவனர்களை சந்தித்து பிரதமர் கலந்துரையாடுகிறார்.

இளையராஜா ஆராய்ச்சி மையம்: 'இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தைப்' பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்: பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ரயில்வே திட்டங்கள்: 'அமிர்த் பாரத்' திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் மேம்படுத்தப்பட்ட பழனி, பரமக்குடி, நாமக்கல், அம்பாசமுத்திரம், வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையங்கள்,

கோவை பகுதியில் 3 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் காரைக்கால் - பேரளம் இடையே 23 கி.மீ புதிய ரயில் பாதை என மொத்தம் ரூ.700 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பிரம்மாண்ட 'ரோடு ஷோ'

சென்னை விமான நிலையத்திலிருந்து பரங்கிமலை ராணுவ மைதானம் வரையிலும், சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையிலும் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட 'ரோடு ஷோ' நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

5 அடுக்கு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள்

பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு 15,000 காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக அக்டோபர் 11-ஆம் தேதி மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகள் மற்றும் பிரதமர் பயணிக்கும் வழித்தடங்கள் அனைத்தும் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளன.

தீவிர சோதனையில் காவல்துறையினர்

இப்பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழிக் கருவிகள் பறக்க விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடுதிகள், ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் குறித்து தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு, நகரின் முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in