ஜி.கே.மணியை வசைபாடுவதை தொழிலாக வைத்துள்ளனர்- ராமதாஸ்!

Ramadoss vs Anbumani Issue : என்னை அரசியலில் இருந்து ஒழித்துவிட வேண்டும் என்று எதை எதையோ பேசுகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
PMK Founder Ramadoss Accused Anbumani Ramadoss Remarks on GK Mani
PMK Founder Ramadoss Accused Anbumani Ramadoss Remarks on GK Manigoogle
1 min read

அன்புமணி- ராமதாஸ் பிரச்னை

Ramadoss vs Anbumani Issue : வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் தங்களை மக்கள் முன் பல வித முன்னேற்பாடுகளை செய்து சந்தித்து வருகின்றனர். தற்போது 4 முனை போட்டிகள் என தேர்தல் களநிலவரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில், அனைவரும் கூட்டணி வைத்து தங்களை மேலும் பலப்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் உட்கட்சியிலேயே இவ்வளவு மோதலா, என்ற வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அப்பா, மகன் பிரச்னை தொடர்ந்து அனல் பறந்து வருகிறது. இதில் கட்சி இலக்கத்தையோ, கட்சிப்பெயரையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை சாடினார்.

இதனை பொருட்படுத்தாது, பல வித இடையூறுகளை தாண்டி தொடர்ந்து, அன்புமணி அதிமுகவில் கூட்டணி வைத்து கட்சியின் தலைவர் தான் என்று கட்சியை பலப்படுத்தி வருகிறார். இதற்கிடையால், தேர்தல் ஆணையம் தரப்பும் தனக்கு சாதகமாக வந்து இருக்கிறது என அன்புமணி தொடர்ந்து, எகஸ் வலைதளத்தில் அரசியல் செய்து, எதிர்கட்சிகள் மற்றும் பல வித விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார். இந்த சூழலில் , ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரின் தரப்பு வாதம் செய்தியாளர் சந்திப்பு மற்றும் அறிக்கை என வெளியிட்டு வருகிறது.

ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ஒரு பொய் கூட்டம், பொய்யும் புரட்டுமே அரசியலாக நடத்திக் கொண்டு இருக்கிறது. நாங்கள் அந்த கூட்டத்தை கட்சியில் இருந்தே நீக்கி விட்டோம். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். அவர்களோடு சேர்ந்த சில கூட்டங்கள் பொய், பொய்யாக பேசுகிறது. இட்டுக்கட்டி பேசுவது, ஏளனமாக பேசுவது, மனம் புண்படும் வகையில் பேசுவது ஆகியவற்றை செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து ஒழித்து விட வேண்டும் என்று பேசுகின்றனர்

மேலும், என்னை மட்டுமல்ல 26 ஆண்டு காலம் ஓய்வின்றி உழைத்த கவுரவ தலைவர் ஜிகே மணியையும் வசை பாடுபவதை தொழிலாக செய்து வருகிறது என்று தெரிவித்த அவர், பொய்யர்கள் கூட்டம், அரசியல் பேசாமல் என்னை அரசியலில் இருந்தே ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் எதை, எதையோ பேசுகிறார்கள். டில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷனில் இருக்கும் சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு வழக்கு போடுகின்றனர். தேர்தல் கமிஷனே ஒரு வழக்கு போடுவது வேடிக்கையிலும், வேடிக்கை என்று ராமதாஸ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in