பம்மாத்து வேலை செய்வதை அன்புமணி நிறுத்தி கொள்ள வேண்டும் : ராமதாஸ்!
கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை வழங்கி தீர்ப்பு
PMK Founder Ramadoss Executive Meeting in Thailapuram : இந்த கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்களாக உள்ள கெளரவ தலைவர் ஜி கே மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்திமதி, பொதுச்செயலாளர் முரளி சங்கர், தலைமை நிலைய செயலர் அன்பழகன் உள்ளிட்ட 23 நிர்வாகிகளில் 21 நிர்வாகிகள் பங்கேற்று கூட்டணி அமைக்கும் முழு அதிகாரத்தை மருத்துவர் ராமதாசுக்கு வழங்கி 13 தீர்மானங்களை நிறைவேற்றினர்.
செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவன ராமதாஸ் நிர்வாக குழு கூட்டம் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்படுவதாகவும்,நிர்வாக குழு கூட்டத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் அடுத்து செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு தனக்கு முழு அதிகாரம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
கட்சியில் இருந்து நீக்கியும் அன்புமணி கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்துகிறார்
தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு தலைவர் பதவி இல்லை அவருக்கு தலைவர் பதவியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை அவர் தலைவர் இல்லை என தேர்தல் ஆணையமும் டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதாக கூறினார்.
பாமக பெயர், சின்னத்தை பயன்படுத்த கூடாது
பல மாதங்களுக்கு முன்னாள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி கட்சியின் சின்னத்தையும் பெயரையும் பயன்படுத்த கூடாது என புகார் அளிக்கபட்டுள்ளது.
அன்புமணிக்கு வன்மையான கண்டனம்
ஆனால் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தி வருகிறார். இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் டெல்லியில் தொடுத்த வழக்கில் தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ளதாகவும்,கட்சியின் உறுப்பினரே அன்புமணி இல்லை அவர் விருப்ப மனுவை வாங்கி வருகிறார். பம்மாத்து வேலையை செய்யும் அன்புமனியை நிர்வாக குழு வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புமணியின் செயல் வேதனை
பல்வேறு பதவிகள் கொடுத்து அன்புமணிக்கு அழகு பார்த்தோம் தீட்டிய மரத்தில் கூர்பாச்சி உள்ளார்கள் ஆலமரம் போன்று வளர்த்த கட்சியை ஆலமரத்து கிளையிலிருந்து கோடாரியை செய்து வெட்ட அன்புமணி ஆரம்பித்துள்ளார்.
தான் நட்ட பூங்காவில் உள்ள செடியில் பல குரங்குகள் நாசம் செய்யும் வேலையை செய்கிறார்கள் என வேதனை தெரிவித்தார். டெல்லி தேர்தல் ஆணையம் நீதிமன்றம் சொல்லியும் விருப்ப மனு வாங்குவது கூட்டம் நடத்துவது பம்பாத்து வேலை செய்வது என்பது தமிழக அரசியலில் நடைபெறாத ஒன்று, அன்புமணியின் செயல் வேதனை அளிப்பதால் இதனை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் நிர்வாக குழு கண்டிப்பதாக தெரிவித்தார்.
பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்
ஆயிரகணக்கான பொய் மூட்டைகளை அவிழ்த்து சில ஊடகங்களுக்கு அன்புமணி கொடுத்து வெளியிடுவது வருத்தம் அளிப்பதாகவும் தான் ஊடகம் நண்பன் என்றும் உண்மை எது பொய் எது என்று பகுந்தறிந்து ஊடகம் செய்தியாக வெளியிட வேண்டும் என்றும் டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி சேலத்தில் பொதுக்குழு நடைபெறுவதாக அறிவித்தார்.
பம்மாத்து வேலை வேண்டாம்
ஜனநாயக நெறிப்படி கட்சியை நடத்தி வருவதாகவும்,குரங்கு கையில் உள்ள பூமாலை போல அண்புமணி பாமகவை கட்சியை வழி நடத்துவதாக கூறினார். மேலும் அந்த பெயரை (குரங்கு என்று )சொல்ல கூட வெட்கமாக உள்ளதாகவும், பாமகவை சார்ந்தவர்களும், பிற கட்சியை சார்ந்தவர்களும் தன்னை நேசிப்பதாகவும், பம்பாத்து வேலை செய்யவதை நிறுத்தி கொள்ள வேண்டுமென எச்சரிப்பதாகவும், இந்த பருப்பு வேகாது வேண்டாம் தம்பி பொதுவாக உள்ள மக்கள் திட்டுவதை காதில் கண்டு கொள்ளாமல் அன்புமணி உள்ளதாகவும், தவறான புள்ளி விவரத்தை கொடுத்து தேர்தல் கமிஷனையே ஏமாற்றி உள்ளார்கள்.
யாரையும் ஏமாற்றுவார்கள்
இவர்கள் யாரை தான் ஏமாற்ற மாட்டார்கள். சட்டமன்ற தேர்தலில் வெற்றிக் கூட்டணியை நிச்சயமாக வழங்குவேன் என்றும் செயற்குழு பொதுக்குழு தனக்கு அதிகாரம் வழங்கும் என தெரிவித்தார். தீர்ப்பு தெளிவாக உள்ளது கட்சி என்னுடையது சிவில் நீதிமன்றத்தில் போக வேண்டியது இல்லை மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
