எக்ஸ் தளத்தில் அன்புமணி பதிவு
Anbumani Ramadoss on DMK : அவர் குறிப்பிட்டுள்ளதில் தமிழ்நாட்டில் ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளின் கட்டணத்தை பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில், உயர்த்த வேண்டும் என்ற வாடகை ஊர்தி ஓட்டுனர் சங்கங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப் படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது.
ஆனால், கடந்த ஆண்டு அளித்த கட்டண உயர்வு குறித்த வாக்குறுதியை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாதது கண்டனத்திற்குரியது என்று பதிவில் குறிப்பிட்டிருந்தார் .
ஆண்டு வாரியாக உயர்த்தப்பட்ட கட்டணம்
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகரப்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளுக்கான கட்டணம் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி உயர்த்தப்பட்டது.
அதன்படி ஆட்டோக்களுக்கு குறைந்தபட்சக் கட்டணமாக 1.8 கி.மீக்கு 25 ரூபாயும், அதன் பின்னர் ஒரு கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், அதன்பின் 13ஆம் ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இன்று வரை கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
அமைச்சருடன் பேச்சுவார்த்தை
பாதிக்கப்பட்ட ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது இந்த விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய கட்டண விகிதம் அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.
அதன்பின் அமைச்சரை சந்தித்து ஓராண்டு நிறைவடைந்து இரண்டாவது ஆண்டே தொடங்க போகிறது ,அனால் இன்று வரை கோரிக்கையாண்டு நிவேற்ற படவில்லை .
பாதிக்கப்படும் ஓட்டுனர்கள்
கடைசியாக கட்டணம் உயர்த்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பெட்ரோல், டீசல் விலை இரு மடங்காக உயர்ந்து விட்டன வாகனங்களின் உயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட உதிரிபாகங்களின் விலைகள் 2 முதல் 3 மடங்கு அதிகரித்து விட்ட நிலையில் . ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளை இயக்குவதற்கான செலவுகளும் கூடவே அதிகரித்து விட்டன.
அதற்கு இணையாக வாகன வாடகை உயர்த்தப்படவில்லை இது வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாகும் ஒன்றாக மாறியுள்ளது .
தொடரப்பட்ட வழக்குகள்
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வல்லுனர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரை அடிப்படையில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2022ஆம் ஆண்டில் ஆணை பிறப்பித்தது.
அதன்படி அரசுப் போக்குவரத்துத்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.
அதன்பின் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அக்குழு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அதனால் ஊர்திகளுக்கான வாடகையும் இதுவரை உயர்த்தப்படவில்லை என்பது கவலைகூறிய ஒன்றாகும்.
அன்புமணி கண்டனம்
ஒரு வருடம் கடந்தும் கோரிக்கை தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு மறுக்கிறது என்றால், தொழிலாளர்களுக்கு துரோகம் செய்வதையே தொழிலாக வைத்திருக்கிறது என்று தான் பொருள்.
மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ&டாக்சி வாடகைக் கட்டணத்தை திமுக அரசு உடனடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளார் .