அன்புமணி தான் "பாமக தலைவர்" தேர்தல் ஆணையம் : அதிர்ச்சியில் ராமதாஸ்

Election Commission Clarified PMK Leader Anbumani Ramadoss: அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருப்பதால், டாக்டர் ராமதாசும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
PMK Leader Issue Election Commission clarified that Anbumani is Leader of Pattali Makkal Katchi Founder Ramadoss shocked
PMK Leader Issue Election Commission clarified that Anbumani is Leader of Pattali Makkal Katchi Founder Ramadoss shockedGoogle
1 min read

பாமகவில் மோதல்

Election Commission Clarified PMK Leader Anbumani Ramadoss : பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை - மகன் ( ராமதாஸ் - அன்புமணி ) இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து, தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் வரை சென்று இருக்கிறது. தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு நடத்தி இருவரும் தங்கள் பலத்தை காட்ட முயற்சிக்கிறார்கள்.

பாமக யாருக்கு சொந்தம்?

கட்சியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தனது மகன் ஸ்ரீகாந்தியை செயல் தலைவராக நியமித்தார். ஆனால், பாமக தனக்கே சொந்தம் என்பதில் அன்புமணி உறுதியாக நின்றார். இந்தநிலையில், கட்சியின் பெயர், கொடி தொடர்பாக ராமதாசும், அன்புமணியும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.

தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ், அன்புமணி

இரு தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணையத்துக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனை ஆராய்ந்த தேர்தல் ஆணையம் பாமகவுக்கு அன்புமணி தரப்பே உரிமை கொண்டாட முடியும் என்று தெரிவித்தது. இதனால் அன்புமணி ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தார்கள்.

அன்புமணி தான் பாமக தலைவர்

இந்த நிலையில், அன்புமணி தான் பாமக தலைவர் என்று ராமதாஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. ''2026ம் ஆன்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர். பாமக நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். அதற்கான தரவுகள் உள்ளன'' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. .

ராமதாஸ் அதிர்ச்சி

தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் ராமதாஸ் மற்றும் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக, தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த ராமதாஸ் தரப்பை சேர்ந்த ஜி.கே.மணி தேர்தல் ஆணையம் ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது என்று ஆவேசமாக தெரிவித்தார்.

போலி ஆவணங்கள் - ஜி.கே. மணி ஆவேசம்

இது தொடர்பாக பேசிய அவர், ''அன்புமணி தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணங்களை கொடுத்துள்ளார். அதை ஏற்று தேர்தல் ஆணையம் அவருக்கு சாதகமாக செயல்படும் வகையில் இப்படி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டப்பூர்வமற்றவை. தேர்தல் ஆணையமும், அவரும் சேர்ந்து எங்களை ஏமாற்றியுள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.

உற்சாகத்தில் அன்புமணி தரப்பு

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, அன்புமணி தரப்புக்கு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இனி, அன்புமணி செல்லும் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமகவினரே கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியும்.

என்ன செய்வார் ராமதாஸ்?

ராமதாஸ் இனி என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒன்று அவர் தனிக்கட்சி தொடங்க வேண்டும், அல்லது அன்புமணியோடு சமரசமாக சென்று, பாமக நிறுவனராக நீடிக்க வேண்டும்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in