

சிவகங்கை திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்டதைச் சேர்ந்த 29 வயது இளைஞரான அஜித் என்பரை திருப்புவனம் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்ற நிலையில் , அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை மூடி மறைக்கும் வேலையில் அந்தப் பகுதி திமுகவினரும்,காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2022-இல் இருந்து 23 பேர் காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர் யாரையும் காவல்துறையினர் விசாரணையின் போது தாக்குவது இல்லை. அவர்கள் ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். அப்பாவிகளை மட்டுமே காவல்துறையினர் விசாரணையின் போது கடுமையாக தாக்குகின்றனர். திமுக ஆட்சியில் இந்த நிலை தான் நீடிக்கிறது.
எளிய மக்களின் உயிர் என்றால் திமுக அரசு அலட்சியமாக உள்ளது. உடனடியாக இளைஞர் அஜித் கொலை வழக்கில் முழு விசாரணை நடத்தி கடும் சட்ட நடவடிக்கை நடத்த வேண்டும் என்றும் நியாயம் கிடைக்கும்வரை விடப்போவதில்லை என்றும் அந்த அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.