மேகேதாட்டு விவகாரம்:அனைத்து கட்சிகளுடன் பிரதமரை சந்திக்க வேண்டும் ; முதல்வருக்கு பிரேமலதா வலியுறுத்தல்..

சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு விவாத்தின் மீது உரையாற்றிய தேமுதிக தலைவர் பிரேமலதா ,விவசாயிகளுக்கான பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
Premalatha urges CM to meet the Prime Minister along with all parties regarding the Mekedatu issue
Premalatha urges CM to meet the Prime Minister along with all parties regarding the Mekedatu issuegoogle
1 min read

பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம்

 தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜ்ர்ட் மீதான விவதாமும் , மேகேதாட்டு அணை விவகாரம் ட தொடர்பாகவும் சட்டப்பேரவையில் நடைபெற்றது , அதில் உரையாற்றிய தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தனது விவாதத்தை முன்வைத்தார்

காவிரி பிரச்சனைக்கு ஒன்றிய அரசிடம்தான் தீர்வு உள்ளது ,பிரேமலதா

நீட் மற்றும் காவிரி மேகேதாது விவகாரத்தில் ,அனைத்து கட்சியினருடன் சென்று பிரதமரை முதல்வர் சந்திக்க வேண்டும். கர்நாடகாவில் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன.

காவிரி பிரச்சனைக்கு தீர்வு ஒன்றிய அரசிடம் தான் உள்ளது எனவே அனைத்து கட்சியின் கூட்டத்தை விரைவில் கூட்டி , அனைத்து கட்சியினருடன் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருக்க வேண்டும் ,பிரேமலதா

வேளாண்துறை அமைச்சரின் தொகுதியிலேயே மழை நீரில் நெல் மிதக்கிறது, அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் .இப்போது மழைகாலமானது டங்கியிருக்கிறது.

னவே அதனை கருத்தில் கொண்டு குளங்களைத் தூர்வாருதல் தடுப்பணைகள் கட்டி , நீரை சேமித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ,மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குறிப்பாக தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி , பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்

காவிரி மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்துகிறார்கள் , இதற்கு முன்னர் காவிரி பிரச்னைக்கு அனைத்து கட்சி உறுப்பினர்களையும் தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த்.

அதுபோல அனைத்து உறுப்பினர்களையும் தில்லிக்கு அழைத்துச் சென்று பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் மேலும் விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்தோம். அது ஏமாற்றமாக இருக்கிறது என்று பட்ஜெட் மீதான விவகாரத்தில் தெரிவித்தார்

விவசாயிகளில் நலனை கவனத்தில் கொண்டு , நெல் மூட்டைகளை பாதுக்காக்க வேண்டும்

விவசாயிகளில் நலனை கருத்தில் கொண்டு , நெல் கொள்முதல் செய்வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும், விவசாயிகளின் துயரத்தை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நெல் மூட்டைகளை நனையாமல் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

==========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in