ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா: கோலாகல கொண்டாட்டம்!

Rajaraja Cholan 1040th Birth Anniversary 2025: ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
Rajaraja Cholan 1040th Birth Anniversary 2025 Celebrations Held n Thanjavur
Rajaraja Cholan 1040th Birth Anniversary 2025 Celebrations Held n Thanjavur Rajaraja Cholan Statue
1 min read

சிலைக்கு மரியாதை :

Rajaraja Cholan 1040th Birth Anniversary 2025 : உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.சதய விழா தொடக்கம்

உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-வது சதய விழா நேற்று(Rajaraja Cholan Birthday 2025) காலை தொடங்கியது. தொடர்ந்து கருத்தரங்கம், கவியரங்கம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து சதய விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை திருக்கோயிலில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. பின்னர், திருமுறை நூல்களை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து 100-க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் கோயிலிருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.

சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு தஞ்சாவூர் எம்பி ச.முரசொலி, மாவட்ட ஆட்சியர் மா.பிரியங்கா பங்கஜம், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர், தமிழ் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவில் நிர்வாகம் ஏற்பாடு

இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 39 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், அரண்மனை தேவஸ்தானம், ஆகியோர் இணைந்து செய்து, நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடினர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in