முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டுமா? சட்டசபையில் காரசார விவாதம்!

அவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், முதல்வர் விஜய் அவைக்குள் வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டுமா? வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார்.
Should Udhayanidhi stand up when Chief Minister Vijay arrives? A heated debate
Should Udhayanidhi stand up when Chief Minister Vijay arrives? A heated debatesource:google
1 min read

Should Udhayanidhi stand up when Chief Minister Vijay arrives? A heated debate!

தமிழக முதல்வர் விஜய் சட்டமன்ற பேரவைக்குள் வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருப்பது குறித்து அறநிலையத்துறை ரமேஷ் கேள்வி எழுப்பியது பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவையின் கண்ணியம் இதுதான்

சட்டப்பேரவையின் இன்றைய விவாதத்தின் போது, அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்து தற்போது திமுக எம்.எல்.ஏ.வாக உள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப் பேரவையின் கண்ணியம் குறித்து பேசியிருந்தார்.

ஓபிஎஸ் - க்கு அமைச்சர் ரமேஷ் பதில்

இதற்கு பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் கண்ணியமாக பேச வேண்டும் என்றும் கூறுகிறார். முதன்முறை சட்டமன்ற உறுப்பினர்களான நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.

முதல்வர் வரும்போது அமர்ந்திருக்கலாமா?

ஆனால், அதற்குமுன்பு சட்டப்பேரவையில் கண்ணியத்தை கடைபிடிப்பது பற்றி எதிர்க்கட்சித் தலைவருக்கு கற்றுத்தர வேண்டும்.

8 கோடி மக்களின் பிரதிநிதியான முதல்வர் விஜய் சட்டப்பேரவைக்குள் வரும் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவையில் அமர்ந்திருக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

திமுகவினர் கடும் எதிர்ப்பு

அமைச்சர் ரமேஷ் பேச்சிற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், முதல்வர் விஜய் அவைக்குள் வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டுமா? வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார்.

சபாநாயகருக்கு கே.என்.நேரு பதில்

சபாநாயகரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய கே.என். நேரு, கடந்த திமுக ஆட்சியின் போது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவைக்குள் வரும்போதுஎதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்றது இல்லை.அது அது அவர்கள் நடைமுறை தான்.

முடிவுக்கு வந்த விவாதம்

இந்த விவகாரத்தை அவையில் சொல்வது தவறு கிடையாது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிற்கு கற்றுக்கொடுக்க வேண்உம் என்பது தான் தவறு என்று பதிலளித்தார். பின்னர் இந்த விவாதமும் முடிவுக்கு வந்தது.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in