24 மணி நேரத்திற்குள் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை : வானிலை மையம் தகவல் !

இந்தாண்டு முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை
Southwest monsoon to begin within the next 24 hours, says Meteorological Department
Southwest monsoon to begin within the next 24 hours, says Meteorological Department google
1 min read

முன்கூட்டியெ தொடங்கும் தென்மேற்கு பருவமழை

வானிலை மையம் அறிவிப்பின்படி ,இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி, தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வழக்கத்தைவிட முன்னதாக தொடங்கும் மழை

இந்த வருடம் வழக்கத்தைவிட 5 நாள்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

இன்று கனமழை பெறும் மாவட்டங்கள்

அந்த நிலையில் இன்று கனம்ழையை பெறும் மாவட்டங்களாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது

லேசானது முதல் மிதமான மழை

ஒருசில மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மே16ல் கனமழை பெறும் மாவட்டங்கள்

மே 16-ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மே 17-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்,

மே 18 மழை பெறும் மாவட்டங்கள்

தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி ஆகிய 7 மாவட்டங்களிலும், மே 19-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது

வெப்பநிலையை பொறுத்த வரையில்

வெப்பநிலையியை பொறுத்த வரையில் மே 18-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைஒட்டியே இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழன், வெள்ளிக்கிழமை (மே 15, 16) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மழை : மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மே 17-ம் தேதி பலத்த சூறாவளி காற்று வீசுக்கூடும். இதுபோல, அந்தமான் கடல்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதி,

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதி, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 18-ம் தேதி பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மேற்படி தேதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்க்கது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in