கூடுதல் பேருந்துகள் இயக்கம்
Royapuram to Kilambakkam Bus : எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக வரும் பிப்ரவரி 20 -ம் தேதி முதல் ஏப்ரல் 5 -ம் தேதிவரை சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டும் குறித்த எண்ணிக்கையிலான ரயில்களின் இயக்கத்தினாலும் ராயபுரம் டூ கிளாம்பாக்கம் வரை 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது .
ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளின் விவரம்
ஏற்கனே ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரிவரை தடம் எண் E18-ல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை தடம் எண் 18 A -ல் 28 பேருந்துகள் என மொத்தமாக 44 பேருந்துகளும் இதுவரை இயக்கப்பட்டு வருகின்றன.
இதே வழி தடத்தில் கூடுதல் 50 பேருந்துகள் இயக்கம்
புறநகர் ரயில்களின் ரத்து அறிவிப்பை அடுத்து மக்களின் சிரமத்தை குறைக்கவும் ,எளிதில் பயணத்தை மேற்கொள்ளவும் பிப்ரவரி 20 -ம் தேதி முதல் ஏப்ரல் 5 -ம் தேதிவரை ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும் , பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது .
தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை
மக்களின் தேவைக்கேற்ப கூடுதலாக அதே வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது .