

Tamil Nadu Assembly Elections 2026: Vijay's Net Worth RS.645 Crore!
தமிழக சட்டமன்ற தேர்தல்
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
அசையும் சொத்து, அசையா சொத்து
அதன்படி தவெக தலைவர் விஜய்க்கு ரூ.404 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாகவும் ரூ.241 கோடி மதிப்பில் அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.645 கோடி மதிப்பிலான சொத்துகள்
அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.645 கோடிக்கு சொத்துகள் இருப்பது வேட்புமனுவில் தெரியவந்துள்ளது.
விஜய்யின் சொத்து விவரங்கள்
விஜயின் பெயரில் உள்ள அசையும் சொத்துகள் : ரூ.404.58 கோடி
விஜய் மனைவி சங்கீதா பெயரில் உள்ள அசையும் சொத்துகள்: ரூ.15.51 கோடி
சங்கீதா பெயரில் உள்ள அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ. 25 லட்சம்
கொடைக்கானலில் இரண்டு எஸ்டேட்டுகள்
வங்கிக்கணக்கில் உள்ள சேமிப்பு
சாலிகிராமம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ரூ.213.36 கோடி (விஜய்யின் சேமிப்பு கணக்கு)
இந்திராநகர் ஆக்சிஸ் வங்கி கிளையில் நிலையான வைப்பு: ரூ.5.79 கோடி ( விஜய்யின் கணக்கு)
இருப்பில் உள்ள தங்கம், வெள்ளி
விஜய்யிடம் இருப்பில் உள்ள தங்கம் ரூ.1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்கம்.
சங்கீதா பெயரில் 391 சவரன் நகைகள். இதன் மதிப்பு ரூ.4.07 கோடி.
ரூ.1 கோடி மதிப்பிலான 123.91 காரட் வைரம்.
வாகனங்களின் எண்ணிக்கை
தவெக தலைவர் விஜயிடம் டொயோட்டோ லெக்சஸ், டொயோட்டோ வெல்ஃபியர், எல் பிஎம்டபிள்யூ 530 மற்றும் பிஎம்டபிள்யூ 7,
மாருதி ஸ்விப்ட், டிவிஎஸ் எக்ஸெல் ஆகியவை உள்ளதாகவும் மனைவி சங்கீதாவிற்கு சொந்தமாக கார் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கு விவரங்கள்
தவெக தலைவர் விஜய் அசையும் சொத்துகள், அசைய சொத்துகள் விவரங்களோடு கடந்த ஐந்தாண்டுகளில் செலுத்திய வருமான வரிக் கணக்கையும் வேட்புமனுவுடன் சமர்ப்பித்துள்ளார்.
மேலும் , தனது பெயரில் குற்றவியல் வழக்கு மற்றும் தண்டனை பெற்ற வழக்கு எதுவும் இல்லை என்றும் தவெக தலைவர் விஜய் தனது வேட்புமனு தாக்கலில் குறிப்பிட்டுள்ளார்.
===