தமிழக தேர்தல் 2026 : வேட்புமனு பரிசீலனை :ஸ்டாலின், விஜய், நயினார், சீமான் மனுக்கள் ஏற்பு

TN Assembly Election 2026 Nomination : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் ,இன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது
Tamil Nadu Elections 2026: Scrutiny of Nominations — Nominations of Stalin, Vijay, Nainar Nagendran, and Seeman Accepted
Tamil Nadu Elections 2026: Scrutiny of Nominations — Nominations of Stalin, Vijay, Nainar Nagendran, and Seeman Acceptedgoogle
1 min read

வேட்புமனுக்கள் ஏற்பு

TN Assembly Election 2026 Nomination : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் விஜய் , மயிலாப்பூரில் தமிழிசை ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்​ட​மாக ஏப்​.23-ம் தேதி நடை​பெற இருக்கும் நிலையில் . இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்​கியது.

முதல் நாளில் முதல்​வர் ஸ்டா​லின், தவெக தலை​வர் விஜய், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் உள்​ளிட்​டோர் வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்​தனர். நேற்றைய கடைசி நாளான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ,தேமுதிக தலைவர் பிரேமலதா ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்

மனுக்கள் பரிசீலனை

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்​ட​மாக ஏப்​.23-ம் தேதி நடை​பெற இருக்கும் நிலையில் . இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்​கி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. அதன்படி அந்த மனுக்களின் பரிசீலனை இன்று தொடங்குகிறது

ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதன்படி திமுக தலைவர் ,ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் , தவெக தலைவர் விஜய் ,அதிமுக முன்னாள் தலைவர்,தற்போதைய திமுகவின் வேட்பாளருமான ஒபிஸ் ,நாதக தலைவர் சீமான்

ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது., மேலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ,மயிலாப்பூரில் தமிழிசை ,சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது

வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மனுவானது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ,தற்போது அவருடைய ,மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்து

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in