அரசு அலுவலகங்கள் அனைத்திலும் முதல்வர் விஜய் புகைப்படம் கட்டாயம் : தமிழ்நாடு அரசு உத்தரவு!

அரசு அலுவலகங்கள், அரசுத்துறை சார்ந்த கட்டிடங்கள் அனைத்திலும் முதல்வர் விஜய் புகைப்படத்தை வைப்பது கட்டாயம் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tamil Nadu government orders Vijay's photo to be mandatory in all government offices
Tamil Nadu government orders Vijay's photo to be mandatory in all government offices google
1 min read

இது குறித்து செய்திதுறை வெளியிட்டிருக்கும் அறிக்கை

இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதல்வர் விஜய்யின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் அனைத்து அரசு அலுவலகங்கள்,

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் தன்னாட்சி அமைப்புகள், ஏனைய அரசு கட்டடங்களில் உரிய முறையில் காட்சிப்படுத்த வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வராக பதவியேற்ற விஜய்

நடந்து முடிநத சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி கண்டது . கூட்டணி கட்சிகள் ஆதரவளித்திருந்த நிலையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் விஜய்.

அங்கீகரிக்கப்ட்ட முதல்வரின் புகைப்படம்

அரசு அலுவலகங்களில் எந்த மாதிரியான புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, முதல்வரின் ‘அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படம்’ ு செய்தித்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து துறைக்கும் இப்புகைப்படம் அனுப்பி வைப்பு

இந்தப் புகைப்படம் அனைத்துத் துறைகளுக்கும் உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை தெரிவித்துள்ளது.

=============

logo
Thamizh Alai
www.thamizhalai.in