தமிழ்நாடு அரசுப்பள்ளிகள் : மாணவர் சேர்க்கை 4.23 லட்சம் ஆக அதிகரிப்பு; விரைவில் ”ஸ்டீம் கல்வி”, பள்ளிக் கல்வித்துறை..!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு புதிதாக 4.23 லட்சம் மாணவர்கள் புதிதாக இணைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
Tamil Nadu Government Schools: Student Enrollment Rises to 4.23 Lakh
Tamil Nadu Government Schools: Student Enrollment Rises to 4.23 Lakhgoogle
2 min read

தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு புதிதாக தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 4.23 லட்சம் மாணவர்கள் புதியதாக சேர்ந்து உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது,

அதன்படி ஒன்றாம் வகுப்பில் 2,94,209 மாணவர்களும் 2 முதல் 8ம் வகுப்பு வரை 88,515 மாணவர்களும் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது

பள்ளிக் கல்வித்துறை அறிக்கை

புதிய மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகளில் 41,231 மாணவர்கள் இணைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் மட்டும் 2 முதல் 8-ஆம் வகுப்புகள் வரை 88,515 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ,

மொத்த புதிய சேர்க்கையில், அதிகபட்சமாக 1-ஆம் வகுப்பில் 2 லட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மொத்த மாணவ, மாணவியர் சேர்க்கை 4 லட்சமாக இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 24,000 பேர் இணைந்துள்னர் என்று பள்ளி கல்வி துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

புதிதாக பாடத்திட்ட மறுசீரமைப்பு

புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசில் , பள்ளி கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்ததுபடி , பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழகத்தில் 'ஸ்டீம்' (STEAM) என்ற புதிய கற்பித்தல் அணுகுமுறை அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக கல்வியில் ஸ்டீம் கல்வி முறை

இந்தக் கல்விமுறை கர்நாடக மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் விரிவாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு இடையே இருக்கும் கற்றல் இடைவெளியைப் போக்குவதற்கு இந்தக் கல்விமுறை உதவுகிறது.

அதேபோல், மத்திய பிரதேசத்தில், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஸ்டீம் முறையை ஒரு தனிப் பாடப்பிரிவாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடினமான பாடங்களால் மாணவர்கள் இடைநிற்பதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.

2006இல் அறிமுகம் ஆகி, 2010 முதல் உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்

அரசுப் பள்ளிகளில் பிரியாணி வழங்க முடிவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை போன்ற கலவை சாதங்கள் போன்ற கலவை சாதங்கள் வழங்கி வரும் நிலையில்,

வாரத்திற்கு ஒரு முறை பிரியாணி வழங்க முடிவு எடுத்து பரிசீலனை செய்து வருவதாகவு , இது குறித்து வருகிற பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது

விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம்

இந்த நிலையில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு , முதல்வரின் இந்த காலை உணவு திட்டத்தினை பெயர் மாற்றம் செய்து ”காமராஜர் காலை உணவு திட்டம் என்று அறிவித்துள்ளது,

இருப்பினும் இந்த திட்டமானது எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

===========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in