தமிழகத்தில் வெப்பநிலை உயரும் : ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் உயர்ந்து இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது
Temperatures to rise in Tamil Nadu, heavy rain likely in a few places: Meteorological Department
Temperatures to rise in Tamil Nadu, heavy rain likely in a few places: Meteorological Department google
1 min read

வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை

ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக குறைப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது

அதிகபட்ச வெப்பநிலை

அதிகபட்ச வெப்பநிலை சென்னை விமான நிலையம் பகுதியில் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் வெப்ப அளவு கணிசமாக உயர்ந்துள்ளது.

கனமழைக்கும் வாய்ப்பு

இந்த நிலையில் , சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதிகளிலிருந்து தமிழகம் வரை தென்மேற்கு வங்கக் கடல் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதனால் இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது

ஆரஞ்சு எச்சரிக்கை

22ஆம் தேதி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மே 23ஆம் தேதி திருவண்ணாமலை, திருச்சி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று அறிவித்துள்ளது

வெப்பநிலையானது உயரக்கூடும்

சென்னையை பொறுத்த வரையில் தமிழ்நாட்டில் அதிகபத வெப்பநிலை இயல்பான அளவை விட சுமார் 3 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்க கூடும் என்று கூறி உள்ளது.

இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் என ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக் கூடும் எனவும் எச்சரித்து உள்ளது.

அதிகரிக்கும் வெப்பம், மக்கள் அசௌகரியம்

பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் 104 டிகிரி அல்லது 105 டிகிரி வரை வெப்பம் பதிவாகும். ஆனால் தற்போது இந்த அளவு 107 டிகிரி, 108 டிகிரி என்று அதிகரித்து கொண்டே செல்வது மக்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தம் என்கிறார்கள் நிபுணர்கள்.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in