சென்னையில் மே 1 முதல் வெயில் கொளுத்தும் : தனியார் வானிலை மையம் கணிப்பு

சென்னையில் மே 1ஆம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
The heat will be scorching from May 1, Chennai Meteorological Department predicts.
The heat will be scorching from May 1, Chennai Meteorological Department predicts. google
1 min read

நெருங்கும் கோடை

கோடைகாலமனது இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் அதன் தாக்கம இப்போதே எகிறியுள்ளது . குறிப்பாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயியின் தாக்கம் இயல்பை விட அதிகரித்து சதம் அடித்துள்ளது.

மே 1 முதல் வெயில் கொளுத்தும்.

இந்த நிலையில் மே ஒன்று முதலே வெளியில் இயல்பை விட அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மே 2ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது

அசௌகரியம் சூழல் ஏற்பட வாய்ப்பு

வெயில் எதிரொலில் காரணமாக , அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வெயிலால் பாதிக்கக்கூடிய பகுதிகள்

சென்னையில் மே 1ஆம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

சுகாதார துறையின் வழிகாட்டு நெறிமுறை

வெயிலின் அதிகபட்ச தாக்கத்தை அடுத்து , சுகாதார துறை பொதுமக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

* வெப்ப இழப்பைத் தவிர்க்க தினமும் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகியே கட்டாயம் அருந்த வேண்டும்

* தண்ணீருடன் சேர்த்து இளநீர், மோர், பழச்சாறு போன்ற தண்ணீர் சத்து அதிகம் நிறைந்த பழம் ஆகிவற்றை எடுத்துக்கொள்ளுதல்

* நீர்ச்சத்து இழப்புக்கான அறிகுறிகள் இருக்கும்போது ஓஆர்எஸ் உப்புச் சர்க்கரை கரைசல் பருக வேண்டும்.

செயற்கை பானங்களை தவிர்த்தல்

* காபி, டீ மற்றும் செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்களை தவிர்த்து கொள்ளுதல்

* பகல் 11-4 மணி வரை வெளியில் தேவையற்ற செயலுகாக வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

* வெளியில் செல்ல நேர்ந்தால் தண்ணீர், குடை, ஓஆர்எஸ் கரைசல் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

* கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்களில் ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

* பருத்தி மற்றும் மிருதுவான ஆடைகளை அணிய வேண்டும்

* முடிந்த அளவு காற்றோட்டமான பகுதிகளில் இருக்க வேண்டும்

போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

=============

logo
Thamizh Alai
www.thamizhalai.in