

150 டிகிரி முடித்த பேராசிரியர்
Professor who has completed 150 degrees! 200 is the next goal!ஒரு பட்டப்படிப்பு முடித்து, போதும்டா யப்பா என்று சொல்லும் காலகட்டத்தில், சென்னையை சேர்ந்த ஒரு பேராசிரியர் 150 க்கும் அதிகமான பட்டப்படிப்புகளை முடித்து சாதனை படைத்திருக்கிறார். வழக்கமாக பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்கள் அதிகபட்சமாக இரண்டு அல்லது 3 டிகிரி முடிப்பார்கள் , சிலர் பிஹெச்டி, எம்ஃபில் போன்றவற்றை படிப்பார்கள். ஆனால் சென்னையை சேர்ந்த பேராசிரியர் 150-க்கும் அதிகமான பட்டப்படிப்புகளை முடித்திருக்கிறார்.
தாய்க்கு செய்த சத்தியம்
படிப்பை மட்டுமே தனது முழுவாழ்க்கையாக மாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் டாக்டர் பார்த்திபன் குறித்து பலருக்கு பல வித கேள்விகள் எழலாம், அவர் 150 க்கும் அதிகமான பட்டப்படிப்புகளை இவர் முடிப்பதற்கு முக்கிய காரணமாக என்னவென்று பார்த்தால் இவரின் தாயருக்கு அவர் செய்து தந்த சத்தியம் என்று தெரியவருகிறது.
போராசிரியர் பார்த்திபன் எடுத்த முடிவு
சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் கல்லூரி பேராசிரியர் பார்த்திபன். இவரை நடமாடும் நூலகம், பட்டப்படிப்புகளின் களஞ்சியம் என மாணவர்கள் செல்லமாக அழைக்கின்றனர். முதன்முதலில் பட்டப்படிப்பு முடிக்கும் போது ஒரு சராசரி மதிப்பெண் எடுத்துதான் தேர்ச்சி பெற்றதாகவும் அந்த மதிப்பெண்களை பார்த்து அவருடைய தாயார் சோகமடைந்ததாகவும் கூறும் பார்த்திபன் அந்த நொடி நான் ஒரு சத்தியம் செய்தேன் சிறந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்வுகளில் வெற்றி பெற்று என்னுடைய தாயாருக்கு பெருமை பெற்று தர வேண்டும் என முடிவு செய்தேன் என்கிறார்.
12 எம்ஃபில் - 4 பிஹெச்டி
1981 ஆம் ஆண்டு தொடங்கிய இவருடைய பட்டப் படிப்பு பயணம் இன்று வரை தொடர்கிறது. 150-க்கும் அதிகமான பட்டப்படிப்பு , டிப்ளமோ படிப்புகளை முடித்திருக்கும் இவர் பொருளாதாரம் ,பொது நிர்வாகம் ,அரசியல் அறிவியல் ,சட்டம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளிலும் முதுநிலை படிப்பை முடித்திருக்கிறார். 12 எம்ஃபில் படித்திருக்கும் இவர் 4 பிஹெச்டி முடித்துள்ளார்.
200 பட்டப்படிப்புகளே இலக்கு
பேராசிரியராக தனக்கு கிடைக்கும் வருமானத்தில் 90 சதவீதத்தை தன்னுடைய படிப்புக்காகவே செலவு செய்வதாக கூறும் இவர், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய புத்தகத்தை எடுத்து படிப்பதாக கூறுகிறார் . சிறிது நேரம் கிடைத்தால் ஓய்வு எடுக்கலாம் என அனைவரும் நினைப்போம். ஆனால் எனக்கு நேரம் கிடைத்த உடனே படிக்க வேண்டும் என்று தான் தோன்றும் என கூறுகிறார். கட்டுப்பாடுகள் என்பது நம்முடைய மனதில் தான் இருக்கிறது என கூறும் இவர் 200 பட்டப்படிப்புகளை முடிக்க வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என தெரிவிக்கிறார்.
கட்டாயம் படித்து விடுங்கள்
ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழியை மாற்றி அமைத்து பதிலளிக்கும் வகையில் , வாழ்க்கையே படிப்பிற்காக தான் என்று பார்த்திபன் அர்பணித்து இருக்கிறார்.மேலும் மேற்கொண்டு படிக்கும் இவரின் ஆர்வத்தையும், வேகைத்தையும் பார்க்கும்போது இவர் கட்டாயம் 200 பட்டப்படிப்புகளை முடிப்பார் என்றும் தெரியும் நிலையில், படிப்பின் முக்கியத்துவம் புரிகிறது. எனவே, எதுவானாலும் கறிக்கு உதவவில்லை என்றாலும், கறிக்கும் இதுதான் பொருள் என்று புரியும்படி பட்டப்படிப்பை முடித்துகொள்ளுங்கள்.