ஆளுநர்​ அதி​காரங்​களுக்​குள் முதல்​வர்​ தலை​யீடு இருக்​கக் கூடாது

ஆளுநர்​களின் அதி​காரங்​களுக்​குள் முதல்​வர்​கள் தலை​யீடு இருக்​கக் கூடாது என்று மகா​ராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Governor vs Chief Minister
power of governor by c p radhakrishnanhttps://x.com/NainarBJ
1 min read

பாளை​யங்​கோட்​டை​யில் சுதந்​திரப் போராட்ட வீரர் அழகு​முத்​துக்​கோனின் 268-வது குருபூஜையில் கலந்துகொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

மாநில முதல்​வர்​களுக்கு மகத்​தான அதி​காரங்​கள் உள்​ளன. அதை​வைத்து மக்​களுக்​கான நல்ல திட்​டங்​களை செயல்​படுத்த வேண்​டும். அதை​விடுத்​து, ஆளுநருக்கு இருக்​கும் சில அதி​காரங்​களில் முதல்​வர்​கள் தலை​யிடக் கூடாது. மாநிலத்​தின் முதல் பிரஜை​யாக ஆளுநர்​தான் உள்​ளார்.

நான் 4 மாநிலங்​களில் ஆளுந​ராக இருந்​திருக்​கிறேன். 2 மாநிலங்​கள் எதிர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​கள்​தான். ஆனால், இது​போன்ற எந்​தப் பிரச்​சினை​களும் அங்கு ஏற்​பட​வில்​லை. துணைவேந்​தர்​களை நியமிக்​கும் அதி​காரம் ஆளுநரிடமே உள்​ளது. கேரள அரசு தொடர்ந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் அது தொடர்​பான தீர்ப்பை வழங்​கி​யுள்​ளது. தற்​போது ஒரு தீர்ப்பை மட்​டும் பெற்​றுக்​கொண்​டு, முதல்​வருக்​கு​தான் அதி​காரம் என இங்​குள்​ளவர்​கள் கூறி வரு​கின்​றனர். மாநில ஆளுநர்​களின் அதி​காரங்​களுக்​குள் முதல்​வர்​கள் தலை​யீடு இருக்​கக் கூடாது.

இவ்​வாறு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in