
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் காவல் மரணம் தொடர்பான வழக்கில், உடற்கூராய்வு சோதனையில் அஜித்குமார் உடலில் பல இடங்களில் காயம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் வலிப்பு வந்து இறந்ததாகக் குறிப்பிட்டிருப்பது முரணாக பார்க்கப்பட்டது. இந்தநிலையில் அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்து சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இந்த வீடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து, இது கொடூரமான மிருகத்தனமான தாக்குதல். தமிழக காவல்துறை முழுமையும் மறு பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதற்கு காரணமான அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். அஜித்குமாரின் கொடூரமான கொலையில் தொடர்புடைய அனைவரும் மீதும் வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.