காவல்நிலையத்தில் கர்ப்பிணி மீது தாக்குதல் : பாஜக கண்டனம்

காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் தாக்கியதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவல்நிலையத்தில் கர்ப்பிணி மீது தாக்குதல் :  பாஜக கண்டனம்
https://x.com/NainarBJP
1 min read

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பதிவின் விபரம் :

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

குற்றஞ்சாட்டப் பட்டவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டோரை சரமாரியாகத் தாக்கும் அளவிற்கு காவல்துறை அதிகாரிக்கு துணிச்சல் எங்கு இருந்து வந்தது? அதிலும் ஒரு ஏழை கர்ப்பிணி பெண்ணை தாக்கும் அளவிற்கா காவல்துறையினரிடம் மனிதத்தன்மை மலிந்துவிட்டது? குற்றவாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்டோரை காக்க வேண்டிய காவல்துறையே பாதிக்கப்பட்டோரை தாக்கினால், திராவிட மாடல் ஆட்சியில் எங்கு சென்று நீதி கேட்பது என்று புரியவில்லை.

காவல்துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு தீர விசாரணை செய்து, அதிகார மமதையில் அராஜகத்தின் ஊற்றிடமாக செயல்பட்டு மூன்று பெண்களை தாக்கிய காவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்தப்பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in