தமிழக சட்டமன்ற தேர்தல்
Tamil Nadu Congress Election Manifesto 2026 : தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தலானது வருகிற 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது ,அதற்காக பல கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது ,அந்த வகையில் திமுக கூட்டணியில் இடப்பெற்றிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையயை வெளியிட்டுள்ளது .
தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியீடு
தமிழக்தில் நடைபெறும் சட்டமனற்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையயை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், கட்சியின் செல்வாக்குமிக்கத் தலைவருமான டி.கே. சிவக்குமார் இந்த காங்கிரஸ் அறிக்கையை வெளியிட்டார்.
விழாவில் பேசிய அவர், அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களைப் போலவே, தமிழகத்திலும் ஒரு சிறந்த ஆட்சி அமைய இந்தத் தேர்தல் அறிக்கை வழிகாட்டும் என்று அரைக்கையை வெளியிட்டு பேசினார்.
முக்கிய வாக்குறுதிகள்
வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்பட்டுள்ளது , குறிப்பாக கல்வி , வேலைவாய்ப்பு , இளைஞர்கள் நலன் அகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது ,
குடும்ப அட்டைக்கு மாதம் 2000 பணம் மகளிரின் பெயரில் வரவு வைக்கப்படும்.
தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான அரசுப்பள்ளி டியூஷன் அக்கா திட்டம் செயல்படுத்தப்படும்
முதியோர் உதவித்தொகை 2000 ஆக உயர்த்தப்படும்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும்.
அரசுப்பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப உதவியோடு கற்பிக்கப்படும். ஆசிரியர்களுக்கு ஏஐ பயிற்சி வழங்கப்படும்.
வருவாய் குறைந்த குடும்ப மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பயிற்சி மையம்.
நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படும் போன்ற முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது
=========