வெளிமாநிலத்தவர் 869 பேர் வாக்களிக்க விண்ணப்பம்-அர்ச்சனா பட்நாயக்!

TN Chief Electoral Officer Archana Patnaik on SIR : 2.43 லட்சம் தேர்தல் பணியாளர்கள் `எஸ்.ஐ.ஆர்.' பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
TN Chief Electoral Officer Archana Patnaik About SIR Form Fill Up Process 869 Other State Voters Registration Held in Tamil Nadu
TN Chief Electoral Officer Archana Patnaik About SIR Form Fill Up Process 869 Other State Voters Registration Held in Tamil NaduGoogle
1 min read

எஸ்.ஐ.ஆர் பணிகள் நிலவரம்

TN Chief Electoral Officer Archana Patnaik on SIR : இந்தியாவில் பிஹார் தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாய கூட்டணிக்கு ஜாதகமாக வந்து, தற்பொழுதும் நிதிஷ்குமாரே மீண்டும் முதல்வராக அரியனை ஏறி இருக்கிறார். இந்நிலையில், இதன் தாக்கம் காங்கிரஸின் கூட்டணி கட்சியாக இருக்கும் தமிழகத்தின் திமுகவை பலமாக சிந்திக்க செய்துள்ளது.

இச்சூழலில், இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தல்களில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டு வரும் பல்வேறு மாநிலங்களின் தேர்தல்களில், குறிப்பாக தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, எஸ்.ஐ.ஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஆளுங்கட்சியாகிய திமுக, மற்றும் இதர கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீற முடியாத பட்சத்தில் தற்பொழுது அதில் அவலங்களும், சில குறைகளும் இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

அர்ச்சனா பாட்நாயகர் பேச்சு

இந்நிலையில், எஸ்.ஐ.ஆர். நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர்.நடைமுறையில் கூடுதல் அவகாசத்திற்கு வாய்ப்பில்லை.

டிசம்பர் 4க்குள் முடிக்கப்படும்

எஸ்.ஐ.ஆர் பணிகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும். கூடுதல் அவகாசம் இதுவரை கொடுக்கப்படவில்லை. படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப்படிவங்களில் 50 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. 2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எஸ்.ஐ.ஆர் படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும்.

படிவங்கள் நிராகரிக்கப்படாது

கணக்கீட்டுப் படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்தால் உரிய காரணம் தெரிவிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எஸ்.ஐ.ஆர் படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும்.

டிசம்பர் 4 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள்

பெயர் இடம்பெறாவிட்டால் காரணம் தெரிவிக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர் ஆன்லைன் சர்வர்(SIR Form Fill Up Online Tamil Nadu) சரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒருவர் தவறான ஆவணத்தை கொடுக்கிறார் எனில் அதை பி.எல்.ஓக்கள்தான் கண்டுபிடிக்க முடியும்.

டிசம்பர் 4 வரை எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கும் பணி நடைபெறும். 33,000 தன்னார்வலர்கள், 88 ஆயிரம் பி.எல்.ஓ.க்கள் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 327 பி.எல்.ஓக்கள் தங்கள் எஸ்.ஐ.ஆர் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர்.

809 பேருக்கு வாக்குரிமை

ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களை வாங்குவதாக குற்றச்சாட்டு வைப்பது தவறானது. தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in