ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை : உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு...

சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்தார்...
Tn Food minister announces a important message on TN Assembly regarding the onion price Increase in TN
Tn Food minister announces a important message on TN Assembly regarding the onion price Increase in TNGoogle
1 min read

வெங்காயம் விலை தொடர்ந்து உயர்வு :

தமிழகத்தில் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக மொத்த சந்தைகளுக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ள நிலையில், சில்லறை விற்பனை விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

மழை பாதிப்பு, உற்பத்தி குறைவு மற்றும் போக்குவரத்து செலவின உயர்வு ஆகியவை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

ரேஷன் கடைகளில் விநியோகிக்க முடிவு :

இன்று சட்டமன்றத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் தொடர்ந்து வெங்காய விலை உயர்வதால் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்படைவதாகவும்.

எனவே அதனை சரி செய்ய அரசு தரப்பில் முக்கியமான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக மக்களின் சுமையை குறைக்க அரசாங்கமே அதனை மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய போவதாக அறிவித்தார்

எதிர்கட்சி தரப்பினர் கேள்விகளுக்கு பதில் :

தொடர்ந்து எதிர்க்கட்சி தரப்பில் விலைவாசி தொடர்பாக குற்றம்சாட்டி வந்த நிலையில் உணவுத்துறை அமைச்சர் அதற்கு பதில் தெரிவிக்க அரசினுடைய நடவடிக்கைகள் மட்டும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து சட்டசபையில் பதிலளித்தார்

விலை கண்காணிப்பு குழு

ஜூலை 6ஆம் தேதி, 6.7.2026 அன்று நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் அத்தியாவசிய பொருள் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த விலை கண்காணிப்புக் குழு கூடுவது என்றும், தேவைப்படும் நேர்வுகளில் தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் கூட்டுறவு கடைகள் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்து அப்பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

சர்வேதச போர்சூழல் காரணமாகவும் விலை உயர்வு :

தற்சமயம் ஈரான் போர் காரணமாக வாகன எரிபொருள் விலையேற்றத்தால், போக்குவரத்து செலவுகள் உயர்வு, தற்போது அண்டை மாநிலங்களில் நிலவும் மாறுபட்ட காலநிலையின் தாக்கம் மற்றும் வெங்காய உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் வரத்து குறைவு காரணமாக வெளிச்சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்வு விலை ரூ.56 முதல் ரூ. 60 வரை விற்கப்பட்டு வருகிறது.

முதலில் நகரப்பகுதியில் விற்க ஏற்பாடு :

முதற்கட்டமாக நகரப் பகுதியில் அமைந்துள்ள 8,739 நியாயவிலை கடைகள் ( 80 லட்சம் குடும்பத்தார்கள் இந்த பகுதியில் இருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 35% குடும்ப அட்டைகள்) இவர்கங்களுக்கு 3.9.2026 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு 1 கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.

=====================

=============

logo
Thamizh Alai
www.thamizhalai.in