
பாரத சனாதன மரபின் சிறந்த துறவியும் புலவருமான திருவள்ளுவருக்கு, பண்டைய தமிழ் நாட்காட்டியின்படி அவரது பிறந்த நாளான வைகாசி அனுஷத்தில், தேசம் தனது மரியாதையைச் செலுத்துகிறது என்று ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தி, கர்மா மற்றும் ஞான யோகங்களின் ஆரோக்கியமான கலவையுடன் ஒருங்கிணைந்த தர்ம வாழ்க்கை குறித்த அவரது போதனைகள், மனிதகுலத்தை தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் வடிவமைத்து தொடர்ந்து வழிநடத்துகின்றன என்று புகழாரம் சூட்டியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறள் என்பது தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் உட்பட அனைவருக்கும் ஒரு விரிவான மற்றும் நீடித்த கட்டமைப்பை வகுக்கிறது.
அவரது போதனைகள் ஞானத்தின் தூணாக உள்ளன என்றும்விக்சித்பாரதத்தை நோக்கிய நமது கூட்டு தேசிய பயணத்தை ஊக்குவிக்கவும் வழிநடத்தவும் நித்திய மதிப்புகளை ஈர்க்கின்றன என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.