TNPSC : டிஎன்பிஎஸ்சி முதன்மை தேர்வுகள் ரத்து: பின்னணி என்ன

TNPSC Exam 2026 Cancelled: சென்னையில் தேர்வு மையங்கள் மாற்றம் ,தேர்வர்கள் சாலை மறியல் என தேர்வு குளறுபடிகளால் குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கபடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
TNPSC cancelled the exam all over the State and said a fresh date would be announced soon
TNPSC cancelled the exam all over the State and said a fresh date would be announced soonSource : TNPSC
1 min read

தேர்வு மைய ஒதுக்கீடு குளறுபடி

TNPSC Exam 2026 Cancelled in Tamil Nadu : தேர்வு மைய ஒதுக்கீடு குளறுபடியால், தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற இருந்த குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.

எந்தெந்த பணியிடங்களுக்கு தேர்வு

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்பட அரசுத் துறைகளில் காலியாக உள்ள 828 பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில் சென்னையில் ஏழு மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

அரசியல் தலைவர்கள் கண்டனம்

பல நாட்களாக தேர்வுக்காக தங்களை தயார்படுத்தி தேர்வு எழுத சென்ற தேர்வர்களுக்கு தேர்வு ரத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யபட்டதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .

தலைவர்கள் கண்டனம்

எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் 'நிர்வாகம்' என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை, இந்த தேர்வு ரத்து நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. ஒரு தேர்வைக்கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத, கையாலாகாத அரசுதான் ஆளும் அரசு என்று தெரிவித்துள்ளார் .

நயினார் நாகேந்திரன்

அரசுத் தேர்வுகளில் இதுபோன்ற குழப்பம் எதேச்சையாக நடந்ததா அல்லது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டதா என்பதை ஆதாரங்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கூறியே ஆகா வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தார்.

பெ.சண்முகம்

தேர்வை நடத்துவதில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் .

தவெக தலைவர் விஜய்

எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கிய இந்த வெற்று விளம்பரத்தால் யாருக்கு என்ன பயன்,இதற்கு இளைஞர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கட்டணம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in