TNPSC Group - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் : இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பம்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் தேர்வர்கள் www.tnpsc.gov.in இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கலாம்.
TNPSC Group 4 Notification Last Date to Apply 2026
TNPSC Group 4 Notification Last Date to Apply 2026source:ai generated
1 min read

TNPSC Group 4 Notification Last Date to Apply 2026

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 தேர்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளையுடன் (நள்ளிரவு 11.59 மணியுடன்) முடிவடைகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதமான www.tnpsc.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் மற்றும் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை

கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,574 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பு கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

9.80 லட்சம் பேர் விண்ணப்பம்

கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய நிலவரப்படி (03-11-2026) ஒன்பது லட்சத்து எண்பதாயிரம் பேர் இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளதாக TNPSC உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வித் தகுதியும் கடும் போட்டியும்

குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்றபோதிலும், இளநிலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் போட்டிபோட்டுக் கொண்டு இத்தேர்விற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

எழுத்துத் தேர்வு எப்போது?

ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை அவகாசம் வழங்கப்படும். குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி (10.01.2027) நடைபெறவுள்ளது.

எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள நபர்கள் கடைசி நேர இணையதள நெரிசலைத் தவிர்க்க உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

==========