

தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பு
TTV Dhinakaran Press Meet Today Update in Tamil : செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் தமிழகத்தில் திமுக, என்.டி.ஏ, விஜய் மற்றும் சீமான் தலைமையில் நான்கு முனைப் போட்டி ஏற்படலாம் என்றும், தேர்தல் நேரத்தில் எதிர்பாராத அணி மாற்றங்கள் நிகழலாம் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக, அதிமுக தரப்பில் விஜய் கொடி ஏந்தி நிற்பதைக் குறிப்பிட்டு, பழனிசாமி விஜய் தலைமையிலான கூட்டணிக்குச் செல்ல முயற்சிப்பதாகத் தோன்றுகிறது என்றும் சட்டசபை தேர்தலில் புதிய அணி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளது
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மதிக்கத்தக்க நண்பர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசி. எந்த எதிர்பார்ப்பும் இன்றி இருந்தவர்.
அவரின் அடுத்த கட்ட செயல்பாடு அவரது பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு தான் தெரியும். அவர் எங்களோடு பயணித்துக் கொண்டிருப்பவர்.
அ.தி.மு.க., வில் இருந்து நீக்கப்பட்டதால் மனவருத்தத்தில் இருந்தார். தமிழக மக்கள் நலனுக்காக கவர்னர் ரவி செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்.
தமிழகத்தை பொறுத்தவரை சட்டம், ஒழுங்கு பிரச்னை உள்ளது. ஆனால் தீவிரவாதம் இல்லை. தமிழக மக்கள் பெரும்பான்மையாக ஒரு அரசை தேர்வு செய்துள்ளனர்.
வாக்களர் பட்டியல் வந்த பின்பு திருத்தங்கள் செய்யலாம்
நிதி தொடர்பாக மக்கள் நலன் சார்ந்த பிரச்னைக்கு மத்திய அரசு தாயுள்ளத்தோடு பரிசீலக்க வேண்டும். தி.மு.க., தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதுதான் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டமாக உள்ளது.
எஸ்.ஐ.ஆர்., திருத்தம் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. டிச., 4 வரை கால அவகாசம் போதுமானதே. வரைவு வாக்காளர் பட்டியல் வந்த பின்பு திருத்தங்கள் இருந்தால் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.