தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம் பாஜக வழியை போலவா-அருண்ராஜ் கேள்வி!

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றதால் அவருக்குப் பதில் மீண்டும் ஒரு பொறுப்பு டிஜிபி-யை நியமிப்பதா என தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுபியுள்ளது.
Is Tamil Nadu becoming a police state, following the BJP's path? - Arunraj questions!
Is Tamil Nadu becoming a police state, following the BJP's path? - Arunraj questions!google
1 min read

அருண்ராஜ் அறிக்கை

tvk arunraj tweet தமிழகத்தில் விடுப்பில் சென்ற பொறுப்பு டிஜிபிக்கு பதிலாக மற்றொறு டிஜிபி நியமித்துள்ளதற்கு தவெக கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போலீஸ் துறையின் மாண்பை சீர்குலைக்கும் பொறுப்பு துறப்பு முதல்வர் மு.க. ஸ்டாலின். ஏற்கெனவே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும், காவல்துறையின் கண்ணிய மரபுகளையும் மீறி மாநிலத்தின் உயர்ந்த டிஜிபி பதவிக்கு பொறுப்பு டிஜிபியை, கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நியமித்தார் முதல்வர் ஸ்டாலின்.

மீண்டும் பொறுப்பு டிஜிபி நியமித்துள்ள ஸ்டாலின்

அப்போதே இதற்கு தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து, நிரந்தர டிஜிபியை நியமனம் செய்ய வலியுறுத்தினோம். இந்த நிலையில்,இப்போது போலீஸ் துறையின் மாண்பை மீண்டும் கேள்விக்குறியாக்கும் வகையில், பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றதால் மீண்டும் ஒரு பொறுப்பு டிஜிபி-யை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதி

போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வர் இப்படி பொறுப்பற்று நடந்து கொள்வது காவல்துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்! கேட்டால் உத்திரபிரதேசத்திலும் பொறுப்பு டிஜிபி தான் என்கிறார்கள். அப்படி என்றால் பாஜக வழியில் தான் நாங்களும் போலீஸ் ராஜ்ஜியம் நடத்துகிறோம் என ஒப்புக் கொள்கிறாரா முதல்வர் ஸ்டாலின்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய பொறுப்பு டிஜிபி நியமிப்பிற்கான பிண்ணனி

தமிழகத்​தின் சட்​டம்- ஒழுங்கு பொறுப்பு டிஜிபி​யாக உள்ள வெங்​கட​ராமனுக்கு நேற்று முன்​தினம் சுவாசிப்​ப​தில் சிரமம் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் கிண்டி கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனைக்​குச் சென்​றார். அங்கு சில மருத்​து​வப் பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்டன. தொடர்ந்​து, அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். டிஜிபி​யின் உடல்​நிலை சீராக இருப்​ப​தாக​வும் அவர் ஓய்வு எடுக்​க​வும் மருத்​து​வர்கள் அறி​வுறுத்​தினர்.

இதையடுத்து பொறுப்பு டிஜிபி​யான வெங்​கட​ராமன் வரும் டிச.25-ம் தேதி வரை மருத்​துவ விடுப்பு எடுத்​துள்​ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்​காரண​மாக டிஜிபி​ பொறுப்பை கூடு​தலாக அபய்​கு​மார் சிங்​குக்கு வழங்கி தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. சுமார் 27 ஆண்​டு​கள் அனுபவமுள்ள இவர், தற்​போது ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​புத் துறை டிஜிபி​யாக உள்​ளார். அவருக்கு கூடு​தலாக சட்​டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in