
கரூரில் நிர்ணயிக்கப்பட்ட பிரச்சார கூட்டம்
TVK Vijay Campaign Stampede Death in Karur : தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்டம் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக திருச்சியில் தொடங்கிய பரப்புரை, கரூர் பிரச்சார கூட்டம் வரை தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் கரூரில் நடைபெற விருந்த பிரச்சார கூட்ட இடத்திற்கு பல வித எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு முன் தேர்வு செய்த இடம் நிராகரிக்கப்பட்டது. பிறகு கரூரிலே பிரச்சார கூட்டம் வேறொரு இடத்தில் நிர்ணயிக்கப்பட்டு, நேற்று 27 ஆம் தேி நடைபெற்றது.
உயிரிழப்பு எண்ணிக்கை :
தவெக தலைவர் விஜய்(TVK Vijay) அவர்களின் பரப்புரையுடன் தொடங்கிய இந்த கூட்டமானது, வழக்கம் போல் அலைமோதியது. தொடர்ந்து விஜய் அவர்கள் பரப்புரை மேற்கொண்டு இருக்கும் பொழுது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிறகு கூட்டம் நெரிசல் ஏற்பட்டவுடன், ஒவ்வொரு வரும் மயங்கி விழுந்ததுடன், உயிரிழப்புகள் தொடங்கியது. இதுவரை மட்டும் 39 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், 51 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் ஆண்கள் 13 பேரும், பெண்கள் 16 பேர் மற்றும் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சிகள் விமர்சனம் :
இதைத்தொடர்ந்து தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் , விஜயின் அடுத்த வார பிரச்சார கூட்டம் ரத்து(Vijay Campaign) செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூரில் நடந்த இந்த கோர சம்பவத்திற்கு தவெக, மற்றும் மாநில அரசு திமுக , ஆகியோரை மத்திய அரசு, இதர கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் விமர்சனம் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : திராவிட கட்சிகள் வேண்டாம் : ’நாங்கள் ஆட்சிக்கு வந்தால்’ வாக்குறுதி
இறந்த 39 -நபரின் உடல்கள்(Karur Stampede Death) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.