TVK Vijay on DMK: தவெகவை கண்டு திமுக பயப்படுகிறது: விஜய் பாய்ச்சல்

TVK Vijay Statement on DMK Government : தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் திமுக இருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
TVK Leader Vijay Condemns DMK Government on Police Registered Case Against Bussy N Anand
TVK Leader Vijay Condemns DMK Government on Police Registered Case Against Bussy N Anand
1 min read

ஆனந்த் மீது வழக்குப்பதிவு

TVK Leader Vijay Statement on DMK Government : எக்ஸ தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது :தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

பயத்தின் உச்சத்தில் திமுக

மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.

தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.

மேலும் படிக்க : ஜெயலலிதா தொகுதியில் பிரசாரம் : புது ரூட்டில் TVK தலைவர் விஜய்

வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்

தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த்(Bussy N. Anand) மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in