நாளை மறுநாள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய், எந்தெந்த தொகுதியில் எத்தனை மணிக்கு பிரசாரம்?

TVK Vijay Election Campaign 2026 Schedule : விஜய் தனது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
TVK leader Vijay to begin election campaign the day after tomorrow for TN Assembly Election 2026
TVK leader Vijay to begin election campaign the day after tomorrow for TN Assembly Election 2026source : google
1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

TVK Vijay Election Campaign 2026 Schedule : தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுநாள் வரை அமைதி காத்த விஜய் நாளை முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

அதன்படி நாளை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பேசுவாரா விஜய் ?

மேலும் இதுவரை பொதுவெளியில் தேர்தல் குறித்துப் பேசாத விஜய், இந்த மேடையில் தனது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

5 தொகுதிகளில் பிரச்சாரம்

வேட்பாளர் அறிமுகத்தைத் தொடர்ந்து நாளை மறுநாள் 5 தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

அனுமதி கடிதம்

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தொகுதியிலும் 3000 பேர் பங்கேற்பார்கள் என்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அனுமதி கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எந்தெந்த தொகுதியில் எத்தனை மணிக்கு பிரசாரம்

5 தொகுதிகளில் பெரம்பூரில் காலை 10 மணி, கொளத்தூரில் பகல் 1மணி, வில்லிவாக்கத்தில் பகல் 2 மணி, அண்ணா நகரில் பிற்பகல் 3 மணி இறுதியாக விருகம்பாக்கத்தில் மாலை 4 மணிக்கு பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 12 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய விஜய் அனுமதி கேட்டதாகவும் ஆனால் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

=======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in