

TVK Vijay Tweet on DMK : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திமுக மீதான காட்டமான பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் திமுகவிற்கு வன்மையான கண்டனங்களையும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தவெக தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
தரக்குறைவான வார்த்தை
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.
திமுக அரவணைப்பில் செயல்படும் ஆதாய சூதாடிகள்
தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுகவை வன்மையாக கண்டிக்கும் தவெக
இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தீய சக்தி மண்ணை கவ்வுவது உறுதி
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி என்று தவெக தலைவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளார்.