

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1 வயது பெண் குழந்தை முதல் 60 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகள் வார்த்தைகளால் சொல்லிமாளக் கூடியதல்ல என்றும், வீட்டை விட்டு வெளியில் சென்ற பெண் குழந்தைகள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா? என்று பெற்றோர் ஒவ்வொரு நாளும் பரிதவிக்கும் கொடுமையான நிலை ஏற்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தகைய கொடுர நிகழ்வின் தொடர்ச்சியாக, தாம்பரத்தில் 13 வயது சிறுமி, அரசு சேவை இல்ல காவலாளியின் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
பெற்ற தந்தையை இழந்து வறுமையில் வாடி வந்த அச்சிறுமி, எப்படியாவது கல்வியை கற்று, எதிர்காலத்தில் நல்லதொரு நிலையிலையை அடைந்து விடும் என்ற பெரும் கனவில் வந்தவரை, மரணத்தின் எல்லை வரைக்கு கொண்டு சென்றிருக்கிறான் அந்த காவலாளி.
எனவே, இவ்விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி மேத்யூவுக்கு உரிய தண்டனை பெற்று தர தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும், பாலியல் வன்கொடுமைக்கு முக்கிய காரணமாக இருக்கும் மதுபானக்கடைகள், கஞ்சா புழக்கம், போதைப்பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்க, தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.