"மகளிர் உதவித் தொகை" : அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த TVK விஜய்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும் சிறப்பு உதவித்தொகை முன்பணமாக மூவாயிரம் மற்றும் கோடைகால சிறப்பு தொகை இரண்டாயிரம் சேர்த்து மொத்தமாக ஐந்தாயிரம் வழக்கப்பட்டதை ,தவெக விமர்சித்துள்ளது.
tvk Vijay has criticized the special scholarship provided to all girls in Tamil Nadu,
tvk Vijay has criticized the special scholarship provided to all women in Tamil Nadu,google
1 min read

தவெக தலைவர் சாடல்

TVK Vijay Criticized Stalin on Magalir Urimai Thogai 5000 : வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முனைவைத்துள்ளார் .

இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா

புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்று கோடைகால சிறப்பு தொகையை விமர்சித்துள்ளார்

வீட்டுக்கு வீடு இனி விசில்

மேலும் அவர் குறிப்பிட்டிருப்பது வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்.

திமுகவை அச்சமூட்டும் சக்தி தவெக

ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான் தவெக என்று தான் கூறியிருக்கிறார் .

தவெக அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்ததே இந்த உரிமை தொகை

ன்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.

மக்களுக்கான ஆட்சியை தரும் தவெக

நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி என்று கூறி பதிவிட்டுள்ளார் .

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in