நெல்லையில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்; உண்மையான காங்கிரஸார் தவெகவில் பக்கம் உள்ளனர்- நெல்லையில் விஜய் பேச்சு

TVK Vijay Speech at Tirunelveli Campaign : தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து பாளையங்கோட்டை கேடிசி நகரில் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ மேற்கொண்டார்.
TVK Vijay Speech at Tirunelveli : Campaigning in Nellai in support of candidates: "True Congressmen stand with the TVK"
TVK Vijay Speech at Tirunelveli : Campaigning in Nellai in support of candidates: "True Congressmen stand with the TVK"google
1 min read

உண்மையான காங்கிரஸார் தவெக பக்கம் உள்ளனர்

TVK Vijay Speech at Tirunelveli Campaign : பல கோடிகளை கொடுத்து காங்கிரஸை தங்கள் பையில் போட்டுக் கொண்டனர். ஆனால், உண்மையான காங்கிரஸார் தமிழக வெற்றிக் கழகத்தில் தான் உள்ளனர் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்

திமுக : பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை

நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் பேசிய விஜய், திமுக கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது முட்டுக்கட்டை போட்டு நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்திருப்பார்கள்.

தற்போது அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். இதனால், இங்கு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்த முடிந்துள்ளது என் தெரிவித்தார்

தவெகவிற்கு எதிராக பரப்பப்படும் அவதூறு

தொடர்ந்து பேசிய விஜய் இந்த திமுக அரசு நமக்கு எதிராக பிரச்சினைகள், அவதூறுகள் தொடர்ந்து பரப்பினார்கள். திமுக, பாஜக கூட்டணி வெளியே தனித்தனியாக இருப்பார்கள். ஆனால் இரண்டு பேரும் ஒன்றுதான்.

இருவரின் நோக்கமும் ஒன்றுதான். விஜய் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கமே. நான் வந்ததால் ஊழல் செய்ய முடியாதபடி செய்துவிடுவேன் என்பதால் என் மீது அவர்களுக்கு கடும் ஆத்திரம் என்று திமுகாவையும் ,பாஜகவும் கடுமையாக சாடினார்

எதிர் கட்சிகளின் கூட்டணி கட்சிகள் எட்டுப்படவில்லை

அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை மக்கள் உருவாக்கிவிட்டனர். அவர்களின் கூட்டணி கணக்கு எடுபடவில்லை. அவர்களின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. அதை ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறார். கூட்டணி கட்சியினரே ஒருவருக்கு ஒருவர் ஓட்டு போட மாட்டர்கள் போலிருக்கிறது.

திமுகவின் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம் மீது கடும் ஆத்திரம். அவர்கள் குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிறதாம். அதனால் இன்னும் ஆத்திரம்

இந்த தலைவர்கள் மாதிரி தவெக உழைக்கும்

தொடர்ந்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாடிய விஜய் ,இந்த தேர்தல் 50 ஆண்டு நடக்கும் அதிசய தேர்தல். உங்களுக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வீரன் சுந்தரலிங்கம், வ.உ.சி., அழகுமுத்துகோன், கட்டபொம்மன், குரூஸ் பர்னாந்து போன்ற தலைவர்கள் மாதிரி தவெக உழைக்கும் என்றும்,

ஓட்டை வீணடிக்காதீர்கள்

தவெக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், உழைப்பாளிகள் எல்லாரும் நன்றாக இருப்பார்கள். நமது சந்ததிகள் நன்றாக இருக்கும். எனவே வேறு யாருக்கும் ஓட்டு போட்டு ஓட்டை வீணாக்கிவிடாதீர்கள் என்று இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in