கருணாநிதியின் கோட்டை சேப்பாக்கம் : உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் ! : 2வது முறையாக போட்டியிடுகிறார்...

Udhayanidhi Stalin Files Nomination in Chepauk-Thiruvallikeni Assembly Constituency : உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது 93,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
Udhayanidhi Stalin Files Nomination in Chepauk-Thiruvallikeni Assembly constituency for TN Assembly Election 2026
Udhayanidhi Stalin Files Nomination in Chepauk-Thiruvallikeni Assembly constituency for TN Assembly Election 2026source : google
1 min read

Udhayanidhi Files Nomination in Chepauk!

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

Udhayanidhi Stalin Files Nomination in Chepauk-Thiruvallikeni Assembly Constituency : சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 23 -ல் தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இரண்டு நாள் பொதுவிடுமுறைக்குப் பிறகு இன்று வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்தவர்கள்

ஏற்கெனவே முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் (பெரம்பூர்), நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலானோர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

இந்நிலையில் இன்று திமுக சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணியில், சேப்பாக்கம் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் சிறப்பு

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது 93,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்போது உயதநிதியை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலி 69,355 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

கருணாநிதியின் கோட்டை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 1996, 2001 மற்றும் 2006 என 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக இந்த தொகுதி கருணாநிதியின் கோட்டை என்றே கூறப்படுகிறது.

உதயநிதியின் முதல் வெற்றி

2021 சட்டமன்ற தேர்தலிம் முதல் வெற்றியை பதிவு செய்த உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சர், பின்னர் துணை முதல்வர் பதவி வகித்து தற்போது இரண்டாவது முறையாக கருணாநிதியின் கோட்டை, நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படும் அதே களத்தில் போட்டியிடுகிறார்.

சேப்பாக்கத்தில் போட்டியிடும் பிற வேட்பாளர்கள்

இந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தவிர அதிமுக வேட்பாளர் ராஜாராஜ், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் டி.செல்வம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆயிஷா பேகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in