வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி காலமானார்

வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 60.
வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., 
அமுல் கந்தசாமி காலமானார்
1 min read

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் அமுல் கந்தசாமி. வால்பாறை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வான அவர், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.

புற்று நோய் காரணமாக, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமி உயிரிழந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் அமுல்கந்தசாமி , மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர்.

அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர். அமுல்கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in