
விசிகவின் விருது விழா நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது :
எத்தனை இடங்களில் போட்டியிடப் போகிறீர்கள் என்று திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பாவம் அவர்களுக்கு சிறுத்தைகளை, திருமாவளவனை மதிப்பிட தெரியவில்லை.
அவர்கள் நம்மை சராசரி இயக்கவாதிகளைப் போல பார்க்கிறார்கள். அதனால் தான், இந்தக் கேள்விகள் எழுகிறது. தற்காலிக பலன்களுக்காக இயக்கம் நடத்துவோர்களுடன் நம்மை ஒப்பீடு செய்து பார்க்கிறார்கள் என்று அவர்களின் கேள்வியைக்கண்டு பரிதாபம் கொள்கிறேன்.
எங்களை டீ, பன் கொடுத்து ஏமாற்றிவிட முடியாது. 6 - 8 சீட்டுகள் கொடுத்தோம்.அதற்கு மேல் அவர்களுக்கு சீட்டுக் கொடுத்து ஊக்குவிக்கவில்லை. நாங்கள் அவர்களுக்கு 10 சீட்டுகளுக்கு மேல் எப்போதும் தரமாட்டோம் என்பதுதான் எங்களைப் பற்றிய உங்களது மதிப்பீடு.
எங்களைப் பொறுத்த வரை, நாங்கள் 234 தொகுதிகளுக்கும் இணையானவர்கள். தகுதியானவர்கள். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. தேர்தல் கணக்கில் சொல்லவில்லை. சமூக மாற்றத்திற்கான அடிப்படை பார்வையில் இருந்து கூறுகிறேன்
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.