தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தலானது , வருகிற 23 ம் தேதி நடைபெற இருக்கிறது . இந்த நிலையினுள் அனைத்து கட்சிகளும் தீவிர அரசியல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.
நிறைவடைகிறது பிரச்சாரம்
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பரபுரி பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து , அனைத்து கட்சிகளும் தீவிர அரசியல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
விஜய்யின் பரப்புரை
சென்னை, நந்தனம் மைதானத்தில் நடந்த தவெக பிரச்சார நிகழ்வில் பேசிய விஜய் நமது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. அதில் என்றுமே நாம் மாறவில்லை. கொண்ட கொள்கையில் தவெக உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
அனைவருக்கும் ஆதரவாக விஜய் இருப்பான்
எம்மதமும் நம்மதம். அந்த உண்மையான முகம்தான் விஜய்யின் முகம். விஜய் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் நண்பனாக இருப்பான். சிறுபான்மை மக்களுக்கு என்றும் ஆதரவான நபராக விஜய் இருப்பான் என்றும் பரப்புரையில் பேசினர்
மக்களை கண்டு கொள்ளாத அரசை வீட்டுக்கு அனுப்புவோம்
என்னை நடிகர் நடிகர் என்று சொல்கிறார்கள். ஆமாம் நான் நடிகன் தான். நான் அரசியலுக்கு வந்து நடிக்கவில்லை, இங்கு இருக்கும் பலர் அரசியலில் நாடக வேசங்ககளை போட்டு கொண்டு ஆட்சி நடத்தி கொண்டு இருக்கின்றனர் என்று தெரிவித்த அவர்
தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் வாங்காத அளவுக்கு கடன் வாங்கி கடன் சுமையை உயர்த்தியது திமுக அரசு. இவ்வளவு கடன் வாங்கியதில் இளைஞர்களின் கல்விக் கடனையாவது ரத்து செய்திருக்கலாம்.
மக்களை கண்டு கொள்ளாத நபர்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்? மக்களை கண்டுகொள்ளாத ஆட்சியை, தலைவரை வீட்டுக்கு அனுப்பப் போகும் தேர்தலில் கடைசி பிரச்சாரம் இது என்று பேசினார்
திமுகவிற்கு வாக்கு அளிப்பது , பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம்
போகிப் பண்டிகை அன்று வீணாகப் போனதை தூக்கி வீசுவது போன்று, 75 ஆண்டுகள் பழைய பவள விழாப் பாப்பாவையும், 55 ஆண்டுகள் பல்லாங்குழிப் பாப்பாவையும் தூக்கி வீசி எறியுங்கள். புதிய ஆட்சியைக் கொண்டு வாருங்கள்.
திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம். அனைவரும் ஒரே கூட்டணியில் இருந்து ஒருவனை மட்டுமே எதிர்க்கிறார்கள்." எனத் தெரிவித்தார்.
முதல்வருக்கு சவால்
தொடர்ந்து பேசிய விஜய் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த இரண்டு பேருமே வேண்டாம். இது ஒரு மாற்றத்துக்கான தேர்தல். ஸ்டாலின் சார் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, ஏண்டா விஜய்யை தொட்டோம் என நினைத்து நினைத்து வருந்துவீர்கள் என்றும்,
தொடர்ந்து ஊழல் நடத்தும் அரசு வேண்டுமா அல்லது மக்களாட்சி நடத்தும் தமிழக வெற்றி கழகம் வேண்டுமா என்று மக்களை நோக்கி கேள்வியை எழுப்பினர்
தமிழகத்தில் இரண்டு முனை போட்டிதான். ஒன்று தீய சக்தி திமுக; மற்றொன்று தவெக. நீங்கள் தான் எனக்கு தேர்தலில் நீதி வழங்க வேண்டும்” என்று விஜய் பேசினார்.
================