
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக மத்திய அரசு விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்க இருப்பதாக வெளியான செய்தியால் விவசாயிகள் குழப்பத்திலும், பேரதிர்ச்சியிலும் உறைந்து போயினர்.
மேலும்,பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசானது இணைந்து 22 புதிய திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் செய்தி பரவியிருந்தது . இதைத்தொடர்ந்து விவசாயிகளின் குழப்பத்தை தீர்க்கும் விதமாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தும் நீருக்கு மத்திய அரசு எந்த வரியும் விதிக்க அறிவுறுத்தவில்லை. இது முற்றிலும் போலியான செய்தி என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதைத்தொடர்ந்து ,மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு அமைப்பானது, மத்திய அமைச்சர் சி,ஆர்.பாட்டீல் பேசிய வீடீயோ ஒன்றையும் பகிர்ந்து, நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்பு உண்மையில்லை என்றும் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
----