பழைய பாம்பன் ரயில் பாலம் அகற்றும் பணி துவக்கம் : ஊர்மக்கள் சோகம்!

பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்றும் டெண்டர் ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் எடுத்து, பாலத்தை அகற்றுவதற்கான பூமி பூஜையை தொடங்கியது.
Work begins on dismantling the old Pamban railway bridge - locals are sad!
Work begins on dismantling the old Pamban railway bridge - locals are sad!google
1 min read

பாம்பன் ரயில் பாலம் அகற்றும் பணி துவக்கம்

pamban railway bridge தமிழக நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரயில் பாலங்களும், சாலைப் பாலமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ராமேஸ்வரம் தீவில் வசிக்கும் பொதுமக்கள் பயணம் செய்யவும், ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லவும், இங்கு பிடிக்கப்படும் மீன்கள் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்ய என இந்த பாலத்தின் மூலமாக பல்வேறு நன்மைகள் அவ்வூர் மக்கள் முதல், வெளியூர் யாத்திரைகள் வரை அனைவருக்கும் நன்மை அளித்திருக்கிறது.

2022 ஆம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு

இதில் பிரிட்டிஷ் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் 1914-ம் ஆண்டு பாம்பன் கால்வாயில் கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் தூக்கு பாலத்துடன் கூடிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு, கடலின் நடுவே அமைக்கப்பட்ட முதல் ரயில் பாலம் என்ற பெருமையை பெற்று 108 வருடங்களாக ரயில் போக்குவரத்து நடைபெற்று, 2022-ம் ஆண்டு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பாலத்தை அகற்றுவதற்கு பூமி பூஜை

ரயில்வே நிர்வாகம் பழைய ரயில் பாலத்தை அகற்ற, ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் என்ற ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசு நிறுவனம் சார்பில் பாம்பன் பழைய பாலத்தை அகற்ற ஒப்பந்தம் விடப்பட்டு ரூ.2.81 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதன்பின் டெண்டர் வழங்கப்பட்டு பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் பூமி பூஜையானது நடைபெற்றது.

பழைய பாலத்திற்கு அஞ்சலி

108 ஆண்டுகளாக, கடல்வழியில் இருந்து அடுத்த கரை செல்வதற்கென பேருதவியாக இருந்த இந்த பாலத்திற்கு இறுதி முடிவாக அதை அகற்றுவது என அறிவிப்பு வந்து. தற்போது வேளை தொடங்கியதால். இதற்கு அவ்வூர் மக்கள் முதல் யாத்திரைகள் வரை பலரும் அப்பாலத்திற்கு அஞ்சலி செலுத்தி வருவதாக, சமூக வலைதளங்களில் சோகம் தெரிவித்து இடுகைகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in