EPS Z Plus Security : எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

Z Plus Security To Edappadi Palanisamy : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Z Plus Security To Edappadi Palanisamy
Z Plus Security To Edappadi Palanisamyhttps://x.com/AIADMKOfficial
1 min read

Z Plus Security To Edappadi Palanisamy : அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ்(Z+ Security) பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கான பாதுகாப்பு இசட் பிளஸ் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பில் 12 கமாண்டோ படை வீரர்கள், 52 காவலர்கள் இடம் பெறுவார்கள்.

மேலும் படிக்க : திமுக, பாஜகவுக்கு எதிராக தவெக தலைமையில் கூட்டணி : விஜய் அதிரடி

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு(EPS House) அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2026 பேரவைத் தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் இம்மாதம் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy Tour) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கோவை மேட்டுப்பாளையத்தில் இந்த சுற்றுப்பயணம் தொடங்குகிறது. இந்தச் சூழலில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில், இசட் பிளஸ் பாதுகாப்பு(Z Plus Security) வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : அரசுப்பணிகளில் திமுக ஐடி விங் : எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in