
அரட்டை செயலி அறிமுகம் :
ZOHO's Arattai Messenger App Trending in Google Play Store : சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்னதான் நட்பு பாாராட்டினாலும் இந்தியாவை குறிவைத்து சிலவிதிமுறைகள் விதித்துள்ளார். மேலும் நம் நாட்டில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றுவோரை தடுக்கும் வகையில் எச்1பி விசாவின் கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிகரித்துள்ளார். இது வெளிநாடு செல்லும் இந்தியகர்ளுக்கு பெரும் நெருக்கடியானது. இதனால் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் கண்டிடுபிடிப்புகளை இந்தியாவில் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப்புக்கு மாற்றாக பார்க்கப்படும் ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலியை (Arattai Messenger App) ஏராளமானவர்கள் டவுன்லோட் செய்து வருகின்றனர். ஆப்ஸ்டோரில் வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளி அரட்டை முதலிடம் பிடித்துள்ள நிலையில் ஜோஹோ நிறுவனத்தின்(ZOHO Corporation) மொத்த சர்வர்கள் முடங்கி உள்ளன.
அமெரிக்க எதிர்ப்பு :
டொனால்டு டிரம்பின் இந்த செயலால் இந்தியர்கள் பலரும் கொதிப்படைந்துள்ளனர். இதற்கு ஈடுகட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவை தலைமையிடாக கொண்டு செயல்படும் உணவு நிறுவனங்கள், டீ ஷாப்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடியும் உள்நாட்டு நிறுவனங்களின் பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று மேடைக்கு மேடை பேசி வருகிறார்.
அசத்தல் அரட்டை :
அந்த வகையில் வாட்ஸ்அப் செயலிக்கு பதில் பலரும் அரட்டை (Arattai App) என்ற செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்த செயலியும் வாட்ஸ்அப் போன்றது தான். தனிப்பட்ட முறையிலும், குரூப் தொடங்கியும் மெசேஜ் அனுப்பி கொள்ளலாம். வீடியோ மற்றும் ஆடியோ கால் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம். இந்த செயலி தமிழகத்தை மையப்படுத்தி செயல்பட்டு வரும் ஜோஹோ நிறுவனத்தின் தயாரிப்பாகும். அதோடு இந்த செயலியின் சிம்பள் ‛அ' என்ற தமிழ் எழுத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
முதலிடம் பிடிக்கும் அரட்டை :
இப்போது இந்த அரட்டை செயலி(Arattai App Download) அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கூகுள் பிளேஸ்டோரில்(Google Play Store) வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து திடீரென்று அதிகப்படியாக செயலி டவுன்லோட் ஆவதால் அரட்டை செயலியின் சர்வர் முடங்கி உள்ளது. நேற்று இரவு இந்த சர்வர் பிரச்சனையை எதிர்கொண்டது. இதுபற்றி அரட்டை செயலி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛டியர் அரட்டை பயனாளர்களே உங்களில் சிலர் ஓடிபியை காலதாமதமாக பெறுவீர்கள். இல்லாவிட்டால் ஓடிபி கிடைக்காது. மேலும், கான்டக்ட் சிங்க் உள்ளிட்டவற்றில் பிரச்சனைகளை சந்திக்கலாம் என்று அரட்டை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வரில் ஏற்பட்ட அதிகப்படியான லோட் தான் இதற்கு காரணம். நாங்கள் அதற்கான உள்கட்டமைப்பை விரைவில் விரிவுப்படுத்துகிறோம். இதனால் ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு வருவோம். உங்களின் பொறுமைக்கும், ஆதரவிற்கும் நன்றி'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோஹோவின் வெற்றி :
இருப்பினும் நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்அப்பிற்கு பதிலாக முழுவதுமாக அரட்டை செயலியை மக்கள் பயன்படுத்துவார்களா? என்றால் அது கேள்வி குறிதான். ஏனென்றால், நம் நாட்டில் சுமார் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒரே நேரத்தில் அவர்கள் அனைவரும் வாட்ஸ்அப்புக்கு பதில் அரட்டை நோக்கி செல்ல வாய்ப்பில்லை.
மேலும் படிக்க : ZOHO நிறுவனத்தில் வேலை : தமிழ்நாட்டில் பணி நியமனம்
ஆனால் டிரம்பின் நடவடிக்கையால் அரட்டை செயலியின் பயன்பாடு நம் நாட்டு மக்களிடம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று நெட்டிசன்கள் பலர் கூறினாலும். இந்தியாவின் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கு இதுஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.