ஆஃப் ஸ்டோரில் முதல் இடத்தில் உலா! இனி ஜோஹோதான் முதலிடம்!

ZOHO's Ulaa Browser vs Google Chrome : அரட்டை செயலியை தொடர்ந்து, பல்வேறு புதுவித அப்டேட்டுகளை வழங்கி வரும் ஜோஹோ நிறுவனம், தற்போது உலா பிரவுசர் மூலம் ஆஃப் ஸ்டோரில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ZOHO Corporation's Ulaa Browser Most Downloaded App in App Store vs Google Chrome
ZOHO Corporation's Ulaa Browser Most Downloaded App in App Store vs Google Chrome
1 min read

அரட்டை அறிமுகம் :

ZOHO's Ulaa Browser vs Google Chrome : சென்னையை தலைமையிடமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ கார்ப்பரேஷன், 'அரட்டை' (Arattai) செயலியின் மூலம் சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அலைபேசி அன்பர்களை கட்டிவைத்திருந்த வாட்ஸ்அப்பை, பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை அரட்டை தன் வசம் வைத்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து வரும் ஜோஹோ நிறுவனம், அரட்டையில் புதுவித அப்டேட்டுகளை கொடுக்க உள்ளதாக கூறியிருந்த நிலையில், தற்போது அரட்டையை தாண்டி உலா எனும் செயலியின் மூலம் மொத்த உலகையும் திரும்பி பார்க்கவைத்துள்ளனர்.

உலா முதலிடம் :

பொதுவாக ஆஃப் ஸ்டோரில், அதிக பதிவிறக்கம் பெறும் செயலி முதலிடத்தை பிடிக்கும்(Ulaa Browser Most Downloaded App), அதிக பயனர்களினால் உபயோகப்படுத்தப்படும். இந்நிலையில், தற்போது அரட்டையை தொடர்ந்து, உலா செயலி, ஆப்பிள் சஃபாரி, கூகள் குரோமை பின்னுக்கு தள்ளி ஆஃப் ஸ்டோாில் அதிக பயனாளர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

உலா குறித்து ஜோஹோ

'உலா' பிரவுசர், தொழில்நுட்ப ரீதியாக குரோமியம் (Chromium) கட்டமைப்பை பயன்படுத்தினாலும், அதன் முக்கிய நோக்கம் தரவுச் சேகரிப்பில் இருந்து விலகி இருப்பது தான். இதுபற்றி ஜோஹோ நிறுவனம் கூறுகையில், "உலா பிரவுசர், பயனர்களின் தரவுகளை சேகரிப்பது, சேமிப்பது அல்லது விற்பனை செய்வது கிடையாது. பயனர்களின் தரவுகளை சேகரித்து விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் கூகுள் போன்ற நிறுவனங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையாகும். 'உலா' பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியமாக இருக்கும் எனவும், விளம்பரதாரர்களின் கண்காணிப்பில் இருந்து அவர்களின் ஆன்லைன் செயல்பாடுகள் முற்றிலும் மறைக்கப்படும்" என்று ஜோஹோ உறுதியளித்துள்ளது.

மேலும் படிக்க : கல்வித்துறையிலும் காலடி பதித்த ஸோஹோ ஆஃபீஸ் சூட்! தொடர் வெற்றி!

உலா பதிவிறக்கம்

உலா தற்போது iOS, விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய இயங்குதளங்களிலும் கிடைக்கிறது. அதேசமயம், முழு நேர ஏஐ-கள் உலா பிரவுசரில்(Ulaa Browser) இல்லாதது, கூகுள் குரோமின் ஆதிக்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கலாம் என்றும் சந்தை ஆய்வாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் அலைபேசியின் முக்கிய இயக்கங்களாக இருக்கும் வாட்ஸ்அஃப், இன்ஸ்டகிராமை பின் தள்ளி ஜோஹோவின் புதிய செயலிகள் அறிமுகம், அவர்களின் அடுத்த அப்டேட் என்னவென்று பயனர்களை ஆர்வம் அடைய செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in