

விக்ரம் லேண்டரின் புதிய தரவுகள்
Vikram Lander Chandrayaan 3 Latest Update : சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் 2023 ஆகஸ்ட் மாதம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது சந்திரயான்-3 உந்துவிசை கலன் (Propulsion Module - CH3-PM), மீண்டும் நிலவின் ஈர்ப்புவிசை எல்லைக்குள் நுழைந்து அரிய அறிவியல் தரவுகளை வழங்கியுள்ளது.
புதிய தரவுகளில் விக்ரம் லேண்டர்
இந்தத் தனித்துவமான பயணம், இஸ்ரோவுக்கு (ISRO) நிலவின் சுற்றுப்பாதை இயக்கவியல் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்ககுதல் மற்றும் விண்கலங்ககளைச் செலுத்துதல் என ஏராளமான தரவுகளைப் பெற்றுத் தந்துள்ளது.
சந்திரயான்-3 உந்துவிசை கலனின் புதிய பயணம் சந்திரயான்-3 திட்டம், 2023 ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து LVM3 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
விஞ்ஞானிகள் உற்சாகம்
இதன் முதன்மை நோக்கம் கருதப்படுவது, நிலவில் பாதுகாப்பாக தரையிறங்குவது, ரோவர் செயல்பாடுகளை மேற்கொள்வது மற்றும் முக்கியமான அறிவியல் சோதனைகளை நடத்துவதுதான்.
இந்நிலையில், தற்போது விக்ரம் லேண்டரின் இந்த புதிய தரவுகள் விஞ்ஞானிகளை குஷிப்படுத்தியுள்ளது.
மீண்டும் விண்கலம் நுழைந்தது
விண்கலம் லேண்டர், ரோவர் மற்றும் உந்துவிசை கலன் என மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. 2023 ஆகஸ்ட் 23 அன்று அதன் முதன்மை இலக்குகள் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தன. பிறகு, உந்துவிசை கலன் சுமார் 150 கி.மீ உயரத்தில் நிலவின் சுற்றுப்பாதையில் தொடர்ந்து இயங்கி வந்தது.
2023 அக்டோபரில், இஸ்ரோ 'Trans-Earth Injection (TEI)' என்ற செயல்முறை மூலம் உந்துவிசை கலனை பூமியை நோக்கிய சுற்றுப்பாதைக்கு மாற்றியது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த உந்துவிசைக் கலன் பூமி மற்றும் நிலவு இரண்டின் ஈர்ப்புவிசைகளின் தாக்கத்துடன் இயங்கிவந்தது.
மீண்டும் நிலவின் ஈர்ப்பு எல்லைக்குள் உந்துவிசை கலன் பூமி மற்றும் நிலவின் ஈர்ப்புவிசைகளின் தாக்கம் பெற்ற சுற்றுப்பாதையில் இருந்து விலகி 2025 நவம்பர் 4 அன்று, மீண்டும் நிலவின் ஈர்ப்பு எல்லைக்குள் (SOI) நுழைந்தது.
சுற்றுப்பாதையில் மாற்றம்
மீண்டும் அடுத்த நாள் நவம்பர் 6, 2025 அன்று, நிலவின் மேற்பரப்பில் இருந்து 3,740 கி.மீ தொலைவில் முதல் முறை பதிவுசெயப்பட்டது இரண்டாவது முறை நவம்பர் 11, 2025 அன்று பதிவுசெய்யப்பட்டது.
அப்போது கலன் நிலவிலிருந்து 4,537 கி.மீ தொலைவுக்குள் வந்தது. இதன் விளைவாக சுற்றுப்பாதை அளவில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 100,000 x 300,000 கி.மீட்டரிலிருந்து 409,000 x 727,000 கி.மீட்டராக விரிவடைந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
விண்வெளி பயணங்களுக்கு பயன்
அதே சமயம், சாய்வுக் கோணமும் 34° இலிருந்து 22° ஆக மாறியுள்ளது. உந்துவிசை கலனின் இந்தப் பயணத்தில் கிடைத்துள்ள தரவுகள் செயற்கைக்கோள் இயக்கவியல் பற்றிய மதிப்புமிக்க தரவுகளைக் கொடுத்திருக்கிறது.
சந்திரயான்-3 விண்கலம் தரையிறக்கப்பட்ட பின்னரும் விண்கலத்தின் பகுதிகளைப் பயன்படுத்தும் இஸ்ரோவின் ஆற்றலை இந்தத் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும் இந்தத் தரவுகள் எதிர்கால ஆழ்கடல் மற்றும் விண்வெளிப் பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
விண்கலத்தின் இந்த புதிய தரவுகள் மூலம் கிடைத்த வெற்றியை விஞ்ஞானிகள் கொண்டாடி வரும் நிலையில்,இஸ்ரோவின் மதிப்பு உலகளவில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு தனிபெரும் இடத்தை பிடித்துள்ளது.
================